search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்"

    • கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே ஆழ்வார் கோவில் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மைக்கேல் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை கடையின் ஷட்டர்கள் திறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே அவர் அங்கு விரைந்து வந்தார்.

    அப்போது கடையில் இருந்து மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீ சுக்கும் டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடையில் இருந்த 2074 மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை போன மது பாட்டில்களின் மதிப்பு ரூ4.5 இலட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் கொள்ளையடித்து கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் மதுப்பாட்டில்களை முதியவர் ஒருவர் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டாரம் கிட்டங்கி பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 62) என்பதும் அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 28 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை பார் ஒன்று உள்ளது. இதன்அருகே மது பாட்டில்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிலுவை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடை பார் அருகே ஒருவர் மது பாட்டில்களை ரகசியமாக விற்பனைசெய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது பெயர்துரைசாமி (வயது 52) என்றும் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 28 குவாட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளராக செந்தில் ராஜ் மோகன்பொறுப்பேற்றார் அதன் தொடர்ச்சியாக ஏள்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பபோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இது வரை 30 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வழக்கு பதிந்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளார்.

    மேலும் வளரும் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, விற்பனை செய்வோர். தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா பேதை பொருள் விற்பனை செய்தவர்கள் என 50 மேற்பட்ட வழக்குகள் பதிந்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று

    ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மேலும் ஏற்காடு போட்டுக்காடு கிராமத்தில் உள்ள அரசு மது கடையில் இருந்து ஆட்டோவில் மதுபாட்டில்கள் ஏற்றி வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சோதனையில் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 55) என்பார் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்கள் ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரியவந்தது இதை தொடர்ந்து மேல் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் சதீஷ் (40) விற்பதாக தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சதீஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீ–சார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    • மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
    • அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து உட்கோட்டபகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் இருந்து 46 மது பாட்டில்களும், ரூ.1580-ம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன் என்பவரிடம் இருந்து 8 மது பாட்டில்களும், ரூ.1,360-ம், அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் இருந்து 26 பாட்டில்களும், ரூ.1660-ம், மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் இருந்து 11 மது பாட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டிலும், கைப்பற்றப்பட்டன. அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×