search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையில் மது பாட்டில் திருட்டு
    X

    கோப்பு படம் 

    டாஸ்மாக் கடையில் மது பாட்டில் திருட்டு

    • கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே ஆழ்வார் கோவில் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மைக்கேல் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை கடையின் ஷட்டர்கள் திறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே அவர் அங்கு விரைந்து வந்தார்.

    அப்போது கடையில் இருந்து மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீ சுக்கும் டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடையில் இருந்த 2074 மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை போன மது பாட்டில்களின் மதிப்பு ரூ4.5 இலட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் கொள்ளையடித்து கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×