search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்எண்ணை"

    • புதுக்கடை சுற்றுவட்டார பகுதி கடற்கரை கிராமங்களில் இருந்து சாலை வழியாகவும், கடல் வழியாகவும் அதிக அளவில் கடத்தப்படுவதாக புகார்
    • 34 கேன்களில் 1,200 லிட்டர் மண்எண்ணை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மீன்பிடி படகுகளுக்கு அரசு மானிய விலையில் மண்எண்ணை வழங்கி வருகிறது.

    இந்த மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. குறிப்பாக புதுக்கடை சுற்றுவட்டார பகுதி கடற்கரை கிராமங்களில் இருந்து சாலை வழியாகவும், கடல் வழியாகவும் அதிக அளவில் கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இது தொடர்பாக அடிக்கடி போலீசார் பறிமுதல் செய்தாலும், கடத்தல் தொடர்கிறது.

    இந்த நிலையில் நேற்று தேங்காய்பட்டனம் அருகே ராமன்துறை கடற்கரை கிராமம் 5-ம் அன்பியத்தை சேர்ந்த லாரன்ஸ் (வயது 50) என்பவர் வீட்டில் படகுகளுக்கான மானிய விலை மண்எண்ணை பதுக்கி வைத்திருப்பதாக கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி வேணுகோபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் புதுக்கடை போலீஸ் உதவியுடன், தனிப்பிரிவு ஏட்டு சுனில் ராஜ், வருவாய் ஆய்வாளர் சஜித் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 34 கேன்களில் 1,200 லிட்டர் மண்எண்ணை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    உடனடியாக அதிகாரிகள் அதை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு சென்ற அதே பகுதி 22-ம் அன்பியத்தை சேர்ந்த ஜேசுபாலன் (38) அதிகாரிகளிடம் தகராறு செய்து, மண்எண்ணையை எடுக்கக்கூடாது என தடுத்துள்ளார்.

    மேலும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக புதுக்கடை போலீசில் வட்ட வழங்கல் அலுவலர் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசு பாலனை கைது செய்து, மண்எண்ணையை பறிமுதல் செய்தனர். விசார ணையில் மண்எண்ணை அங்கு பதுக்கியது ஜேசு பாலன் என தெரிய வந்தது.

    • குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.
    • இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி(வயது52). இவர்களது மகன் குமார்(29). சென்ட்ரிங் தொழிலாளி.

    இவர் நீண்டநாட்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.

    ஆனால் அதற்குள்ளாகவே தங்களது மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. குமாரின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக அவரது தாய் ராணி(52) இந்த காதலை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

    இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தாயும், மகனும் பேசிக்கொள்ளவில்லை. இருப்பினும் குமார், தனது காதலியுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதனையறிந்த ராணி தனது மகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று திரும்பிய குமார் வீட்டில் உணவருந்தினார். அப்போது மகன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராணி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது குமார் குடிபோதையில் இருந்ததால் தன் மீது பற்றிய தீயை அணைத்து விட்டு வீட்டில் தூங்கி விட்டார்.

    மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் தீக்காயத்தின் வலி தெரிந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் ராணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோவில் 4 கேன்களில் 120 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
    • 18 கேன்களில் பறிமுதல் செய்த 750 லிட்டர் மண்எண்ணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே அம்சி பகுதியில் நேற்று தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் நிலைய ஏட்டு ரமேஷ் ஆகியோர் அந்த வழியாக சென்ற கேரளா பதிவு எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த ஆட்டோவில் 4 கேன்களில் 120 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதி புல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்த ஜஸ்டின் மகன் ராஜேஷ் (வயது 28) என்பவர் இவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

    மேலும் விசாரித்ததில் இவற்றை இனயம்புத் தன்துறை பகுதி

    33-ம் அன்பியத்தை சேர்ந்த நெப்போலியன் (40) என்பவர் வீட்டில் இருந்து வாங்கி செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து நெப்போலியன் வீட்டில் போலீசார் சோதனையிட் டனர்.

    அப்போது வீட்டில் இருந்து மேலும் 14 கேன் களில் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    மொத்தம் 18 கேன்களில் பறிமுதல் செய்த 750 லிட்டர் மண்எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.
    • கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்ற மண்எண்ணை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மணக்குடி பகுதியில் இருந்து கேரளாவுக்கு மானிய விலைமண்எண்ணை கடத்துவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுக்கடை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுனில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், நிலைய காவலர் கிங்ஸ்லி, ஆகியோர் கைசூண்டி சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக சென்ற பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 50 லிட்டர் கொள்ளளவுள்ள 15 கேன்கள், மற்றும் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 2 கேன்களில் சுமார் 820 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. தொடர்ந்து வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

    விசாரணையில் குளச்சல் பகுதி சிலுவைதாசன் மகன் ஆன்டனி (வயது 27) என்பவர் மேலகிருஷ்ணன் புதூர் பகுதி ரமேஷ் (31) என்பவரின் வாகனத்தில் கேரளாவுக்கு இவற்றை கடத்துவது தெரிய வந்தது. மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்து கொண்டு செல்வதும் தெரிய வந்தது. போலீசார் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தல்
    • சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தப்படுவதால் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் ஏட்டு ரமேஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 10 கேன்களில் 350 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கார் மற்றும் மண்எண் ணையை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்த போது, தூத்தூர் பகுதி ஆன்டனி சேவியர் (வயது 41) என்பவர் முள்ளுர்துறை பகுதி அலக்சாண்டர் என்பவரிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.

    இதேபோல் பார்வதி புரத்தில் வைத்து ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 35 லிட்டர் கொள்ளள வுள்ள 5 கேன்களில் 175 லிட்டர் மானிய விலை மண்எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் என்ற இடத்தை சேர்ந்த அவுசேப் (31) என்பவர் இனயம் புத்தன்துறை பகுதி சொப்னா என்பவரிடம் இருந்து மண்எண்ணை வாங்கியது தெரிய வந்தது.

    புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்த வாக னங்கள், மண்எண்ணை போன்றவற்றை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயலாதேவியிடம் ஒப்படைத்தனர்.

    • குளச்சல் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம்துறை, கோவில்வளாகம் பகுதியில் இருந்து அரசு மீனவர்களுக்கு மானியவிலையில் வழங்கும் மண்எண்ணை கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக குளச்சல் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று மார்த்தாண்டம்துறை மேடவிளாகம் பகுதி வழியாக மானிய மண்எண்ணை ஏற்றி வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது டிரைவர் வாகனத்னதை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் அதில் இருந்த மீன்பிடித் தொழிலுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் வெள்ளை நிறமுடைய மண்எண்ணை இருந்ததை கண்டு பிடித்தனர். 15 கேன்களில் சுமார் 35 லிட்டர் வீதம் மொத்தம் 525 லிட்டர் மண்எண்ணை மற்றும் 25 காலி கேன்களை கைப்பற்றினர்.மண்எண்ணை மற்றும் 25 காலி கேன்களை கைப்பற்றினர்.பின்னர் அவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ×