மார்த்தாண்டம் துறையில் 525 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்

குளச்சல் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மார்த்தாண்டம் துறையில் 525  லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம்துறை, கோவில்வளாகம் பகுதியில் இருந்து அரசு மீனவர்களுக்கு மானியவிலையில் வழங்கும் மண்எண்ணை கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக குளச்சல் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று மார்த்தாண்டம்துறை மேடவிளாகம் பகுதி வழியாக மானிய மண்எண்ணை ஏற்றி வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது டிரைவர் வாகனத்னதை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அதில் இருந்த மீன்பிடித் தொழிலுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் வெள்ளை நிறமுடைய மண்எண்ணை இருந்ததை கண்டு பிடித்தனர். 15 கேன்களில் சுமார் 35 லிட்டர் வீதம் மொத்தம் 525 லிட்டர் மண்எண்ணை மற்றும் 25 காலி கேன்களை கைப்பற்றினர்.மண்எண்ணை மற்றும் 25 காலி கேன்களை கைப்பற்றினர்.பின்னர் அவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com