search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணப்பாடு"

    • கப்பல் மூலம் தேட முடிவு
    • 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28-ந்தேதி நள்ளிரவு ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் எதிர்பாராமல் திடீரென கடலில் மூழ்கியது. இதனால் கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது.

    இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில், கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30-ந்தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொச்சி கப்பற்படையிலிருந்து கப்பல் வரவழைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கப்பற்படை அதிகாரிகள் மணப்பாடு கடல் பகுதி விசைப்படகு மூழ்கிய பகுதியில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். கப்பல் தேடும் பணியை தொடங்கும் முன் அங்கு ஆய்வு நடத்தப்படுவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அல்லது நாளை கொச்சியிலிருந்து கப்பல் மணப்பாடு கடல் பகுதிக்கு செல்லும் என துறைமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் மீட்கப்படாதது மீனவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பெருவிழா மாலை ஆராதனை, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.
    • மகிமைப் பெரு விழாவையொட்டி நெல்லை, தூத்குக்குடி தென்காசி, குமரி, விருதுநகர், மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் ஆலயம் 3 பக்கம் கடல் நடுவினிலே இயற்கையாக அமைந்துள்ளது.

    திருவிழா

    இந்த ஆண்டு ஆலயத்தின் 443-வது திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும் தொடர்ந்து காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜாண் செல்வம் தலைமையில் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது.

    பங்கு தந்தையர்கள் மனோ, ஜாண் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்பங்கு தந்தையர்கள் டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன், மணப்பாடு ஊராட்சி தலைவர் கிரேன் சிட்டா, துணைத் தலைவர் கொலின் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலையில்பங்கு தந்தையர்கள் சுசீலன், ததேயுஸ் ராஜன், ஷிபாகர், விக்டர், லோபோ, சதீஸ்குமார், ஜெயக்குமார், ஜாண்சுரேஷ் ஆகியோர் மறையுரை நிகழ்த்தினர், பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கலைநிகழ்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 8.30 மணிக்கு மணவை மக்கள் சார்பில் திருப்பலியும், தொடர்ந்து திவ்விய 5 திருக்காய சபையின் பொறுப்பாளர் தேர்வும், மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆயருக்கு பங்கு மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில்நடந்தது.

    திருப்பலி

    இன்று காலை திருச்சிலுவை மகிமைப் பெரு விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயம் மற்றும் திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், காலை 5 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு திருத்தலத்தில்ஆயர் நசரேன் சூசை பெரும் விழா திருப்பலி, 5 திருக்காய சபையின் பொறுப்பாளர் நியமனம், மெய்யான திருச்சிலுவைஆசீர் நடந்தது.

    சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏராளமான திருத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், பங்கு பாதிரியார்கள், பங்கு மக்கள் உட்பட பல்லாயிர கணக்கான இறை–மக்கள்கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலி நடக்கிறது.

    மகிமைப் பெரு விழாவையொட்டி நேற்றும் இன்றும்நெல்லை, தூத்துக்குடி தென்காசி, குமரி, விருதுநகர், மாவட்டங்களில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கேரளாவில் இருந்து குடும்பத்துடன் மக்கள் குவிந்துள்ளனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் லெரின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ், அருட் சகோதரர் ரஷ்யன், அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நலக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    ×