search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் ஆணையம்"

    • பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள்.
    • மாணவிகளின் குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ஏராளமான மாணவிகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயின்று வருகிறார்கள். இவர்கள் பேராசிரியர்கள் மற்றும் நடன உதவியாளர்கள் 3 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்துள்ளனர்.

    கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் எந்தெந்த வகையில் பாலியல் தொல்லை கொடுத்தனர்? என்பது பற்றி சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கலாஷேத்ராவில் பேராசிரியரும், நடன உதவியாளர்களும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது எப்படி? என்பது பற்றி மாணவிகள் சிலர் கண்ணீர் மல்க அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியதாவது:-

    என்னிடம் பேராசிரியரும், நடனம் சொல்லி கொடுக்கும் உதவியாளர்கள் 3 பேரும் ஆபாசமாக நடந்து கொண்டனர். செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்புவது... வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பேசுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். சில நேரங்களில் அவர்கள் பார்க்கும் பார்வையே ஆபாசமாக இருக்கும். இதனால் பலமுறை நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

    இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் கூறும்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள். அவர்களின் பார்வையால் உடம்பே கூசும். இதுபோன்ற நேரங்களில் நான் ஆடையில்லாமல் இருப்பது போன்றும் உணர்ந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    மாணவிகளின் இந்த குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா இன்று விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கலாஷேத்ரா மாணவிகளிடம் சீனியர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் போலீசில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மாணவிகள் தற்போதைய சூழலில் போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை தரப்பில் கிரிமினல் விசாரணை எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்த உள்ளது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கல்லூரியின் முன்னாள் இயக்குனர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தேசிய மகளிர் ஆணையம், தமிழக போலீசாருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்ற ஒற்றை கோஷத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

    கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவர்கள் அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.

    இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்த உள்ளது. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் ஆய்வு செய்கிறார். பாலியல் தொல்லை புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்திடம் மகளிர் ஆணைய தலைவர் கேட்டறிய உள்ளார்.

    • கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவியோ, அவரது பெற்றோரோ தங்களிடம் தெரிவிக்கவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • சம்பவம் ஜூலை மாதம் நடந்திருக்கலாம் எனவும் கூறினர்.

    புதுடெல்லி:

    டெல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் சென்று ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் பள்ளி கழிவறையில் மூத்த மாணவர்கள் 2 பேர் தன்னை கற்பழித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இப்புகார் பற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவியோ, அவரது பெற்றோரோ தங்களிடம் தெரிவிக்கவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்திருக்கலாம் எனவும் கூறினர்.

    இந்த தகவல் வெளியானதும் டெல்லி மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறும்போது, இந்த சம்பவத்தை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் முயற்சித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

    ஆனால் அவர்கள் இதனை போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர். எனவே இதுபற்றி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மகளிர் ஆணையத்திற்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறினார். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று மகளிர் சங்க தலைவி கூறியுள்ளார்.
    சித்தூர்:

    பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமையை கண்டித்து சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், பலாத்காரம், குழந்தைகள் பலாத்காரம், மாணவிகளை சில்மி‌ஷம் செய்தல் ஆகியவற்றை கண்டித்துக் கோ‌ஷம் எழுப்பினர்.

    மாவட்ட மகளிர் சங்க தலைவி ஜெயலட்சுமி பேசியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் அதிகளவு பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் நடக்கிறது. அதன் மீது மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழந்தைகளிடம் பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பீளேரைச் சேர்ந்த டாக்டர் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முக்கிய காரணம் திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்களின் துன்புறுத்தல் தான். அதேபோல் திருப்பதியைச் சேர்ந்த அதே மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 2 பெண்களை பலாத்காரம் செய்யப்படுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு நிமிடத்தில் 100 பேரை பலாத்காரம் செய்வார்கள். சிறுமிகளை அதிகளவு முதியோர்களே பலாத்காரம் செய்கிறார்கள். அவ்வாறு பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

    அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதன் மூலம் நாட்டில் பலாத்கார செயல்கள் குறையும். அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு, பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பெண்களுக்கு அதிகளவு துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பல பெண்கள் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்தால் மோதல் ஏற்படும் எனக் கருதி பல பெண்கள் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கெனக் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும்.

    பஸ், ரெயில் நிலையங்களில் போலீசாரை கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவிகளை யாராவது கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×