search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலாஷேத்ரா விவகாரம்"

    • 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பெண் புகார் அளித்திருந்தார்.
    • அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டனர்

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஷீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.

    அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிப்ரவரி 2024-ல் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், நேற்று ஷீஜித்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஷீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.
    • பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி உள்ளது. பாரம்பரிய பெருமைமிக்க இந்த கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன், தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தியது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்தது.

    இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து 250 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான பேராசிரியர் ஹரிபத்மன், 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததையடுத்து கடந்த ஜூன் 6-ந் தேதி அவருக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்த ஹரிபத்மன் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிகளிடம் இருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பாலியல் துன்புறுத்தல் குறித்து கலாஷேத்ரா மாணவிகள் புகார் தெரிவிக்க https://reachoutsupport.co.in இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் சிலர் பேராசிரியர், ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஹரிபத்மன் உள்பட 4 பேரை கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்தது. மேலும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

    இந்த நிலையில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிகளிடம் இருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கலாஷேத்ரா மாணவிகள் புகார் தெரிவிக்க https://reachoutsupport.co.in இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    கலாஷேத்ரா நிர்வாகம் அதனுடைய இணையதளத்தில் இதனை வெளியிட்டுள்ளது. நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன், மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் கல்லூரி நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது பழைய மாணவிகளும், தற்போது படிக்கும் மாணவிகளும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர் மாணவிகளை தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட எந்த ஒரு அடையாளத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று கலாஷேத்ரா மாணவிகள் 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    • மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கலாஷேத்ரா சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் உத்தரவாதம் அளித்தார்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் 3 பேர் மாணவிகளுக்கும், 4 மாணவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், கலாஷேத்ராவில் நடந்துள்ள பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் மீது நடவடிக்கை எடுக்க கலாஷேத்ராவுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களையோ, சாட்சிகளையோ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிரட்டவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது. இந்த வழக்கு தொடர்ந்துள்ள தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட எந்த ஒரு அடையாளத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று கலாஷேத்ரா மாணவிகள் 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர்கள் கேட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீது நீதிபதி உத்தரவிட தொடங்கினார். அப்போது, தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், வழக்கு தொடர்ந்த 7 மாணவிகள் யார் என்று வெளியில் தெரிந்தால்தான், அவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க முடியும் என்று கூறினார். ஆனால், இதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

    இதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கேட்ட இடைக்கால மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்த போது, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கலாஷேத்ரா சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் உத்தரவாதம் அளித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    பின்னர், விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக்கூடாது, மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோர் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனு மீது வருகிற 24-ந்தேதி முடிவு செய்து உத்தரவு அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்காக இந்த வழக்கை 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அதற்குள் விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைப்பது குறித்து கலாஷேத்ரா தன் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • மாணவிகளிடம் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தியது.

    நேற்று மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர். கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராமதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக சுமார் 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், நிர்வாகத்தினர் யாரும் இல்லாமல் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இன்று பிற்பகல் விசாரணை நிறைவடைந்தது.

    இதையடுத்து இறுதி அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் எஸ்.பி. மகேஷ்வரன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    திருவான்மியூர் கலாஷேத்ராவில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவிகள் பலர் கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். இதனை மகளிர் ஆணையம் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் வழங்கி உள்ளது.

    அந்த அறிக்கையில் கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வெளியில் உள்ள நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நடன பயிற்சியாளர்களான ஸ்ரீநாத், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மாணவிகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். இந்த நிலையில் மகளிர் ஆணையம் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீதும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கைது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் முடிவில் 3 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.

    • கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது.
    • பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.

    மேலும் 3 பேராசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறியதால் ஹரிபத்மன் உள்பட 4 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. மாணவிகள் எந்தெந்த வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடமும் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், குமார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் தரப்பில் இன்று தேர்வு நடப்பதால் நாளை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதனை மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஏற்கவில்லை. விசாரணை தாமதம் ஆனால் வழக்கு நீர்த்து போகும் என்பதால் இன்றே விசாரணையை தொடங்கினர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள், பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பேராசிரியர் ஹரி பத்மன் எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். அவர் வகுப்பில் படித்த மாணவிகளிடமும் விசாரணை நடந்தது. மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இன்று விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மாணவ-மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையில் பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • கலாஷேத்ரா விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. தலைமையிலான அதிகாரிகள் இன்று கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் 2 டி.எஸ்.பி.க்கள், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது.
    • நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாதவரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

    கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது.

    இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில், நாளை மனித உரிமைகள் ஆணையத்தின் குழு விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் நாளை விசாரணையை தொடங்குகிறது. ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

    • ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
    • புகார் கொடுத்த குறிப்பிட்ட மாணவி, 2019-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு எனது மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா நடன கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன், முன்னாள் மாணவி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.

    அந்த மனு அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நானும், எனது கணவர் வேலை பார்த்த அதே கலாஷேத்ரா கல்லூரியில் தான் வேலை பார்க்கிறேன். எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. என் கணவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 பேராசிரியைகளின் தூண்டுதலின் பேரில், அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். தவறான அந்த புகார் மனு மீது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நியமித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். குறிப்பிட்ட முன்னாள் மாணவி பொய்யான புகாரை என் கணவர் மீது கொடுத்துள்ளார்.

    புகார் கொடுத்த குறிப்பிட்ட மாணவி, 2019-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு எனது மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். எனவேதான் தூண்டுதலின்பேரில் அந்த மாணவி தற்போது புகார் கொடுத்துள்ளார், என்று குற்றம் சாட்டுகிறேன். பொய்யான புகார் கொடுத்த முன்னாள் மாணவி மீதும், அந்த மாணவியை தூண்டிவிட்ட 2 பேராசிரியைகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் மீதான வழக்கை சட்டப்படி அவர் சந்திப்பார்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் திவ்யா தெரிவித்துள்ளார்.

    • கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது.
    • இதையடுத்து பேராசிரியர் ராஜபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகாரை அடுத்து இது தொடர்பாக பேராசிரியர் ராஜபத்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தின் உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் அஜிதா விலகியுள்ளார்.

    விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கலாஷேத்ராவில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள், எழுந்துள்ள பிரச்னைகளுக்கு நிர்வாகம் தந்த பதிலால் மிகவும் அதிருப்தி அளிப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய சூழலில் மாணவர்களின் அதிருப்தியால், விசாரணை குழு உறுப்பினர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    வழக்கறிஞர் அஜிதா, கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் கடந்த 4 ஆண்டுகளாக உட்புகார் விசாரணைக் குழுவின் உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×