search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு"

    • கந்துவட்டி புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கந்துவட்டி குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கந்து வட்டி வழக்குகளை கையாளவும் காவல்துறை இயக்குநர் சைேலந்திரபாபு அறிவுரையின்படி ஆபரேசன் கந்துவட்டி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003 -ன் அடிப்படையில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் "ஆபரேசன் கந்துவட்டி" என்ற பெயரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவர்கள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தொலைபேசி எண்களிலோ மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட புகார்கள் தொடர்பான விசாரணை உடனுக்குடன் நடத்தப்பட்டு உடனடி யாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

    இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபரேசன் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230904,04567-230759, ஹலோ போலீஸ் 83000 31100,மாவட்ட தனிப்பரிவு 04567 290113 மற்றும் 94981 01615 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ராமநாத புரம் 94981 01616 என்ற எண்ணிலும், பரமக்குடிக்கு 94981 01617,கமுதிக்கு 94981 01618, ராமேசுவரத்திற்கு 94981 01619,கீழக்கரைக்கு 94981 01620, திருவாடானைக்கு 94981 01621, முதுகுளத்தூருக்கு 04567 290208 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருச்சி சாலையில் அதிகரித்து வரும் விபத்துக்கான காரணம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள சிந்தாமணி பிரிவில் தொடங்கி சூலூர், காங்கேயம்பாளையம் வரை சாலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருச்சி சாலையில் பாதுகாப்பற்ற பகுதியாக கருதப்படும் இந்த குறிப்பிட்ட 8 கிலோ மீட்டர் சாலை மிகவும் குறுகலான இருவழிச்சாலையாகவே உள்ளது. சாலையின் அகலத்துக்கு ஏற்ப இல்லாமல் தினந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல முறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையை விரிவாக்கம் செய்தால் தான் விபத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் தற்போது அதிகாரிகள் உணரத் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த சாலையில் ஆய்வு நடத்தினர்.

    மையத்தடுப்புகள் இல்லாத இச்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகா ரிகளுடன் சென்று இந்த சாலையில் ஆய்வு நடத்த உள்ளார். இதில் விபத்துகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
    விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சிலை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது முக்கிய பிரமுகர்களுக்கோ உரிய முன் அனுமதி இல்லாமல் சிலைகள் நிறுவ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் எவரேனும் முன் அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து சிலை அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் பொதுஅமைதியை குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும், எவரேனும் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சட்டத்தை மிறும் வகையில் அரசியல் தலைவர்களுக்கு சிலைவைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சிலையை நிறுவ முற்படுவோர் மட்டுமின்றி, உரிய அனுமதியின்றி சிலையை உருவாக்கும், வடிவமைக்கும் நபர்கள் மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
    ×