என் மலர்

  நீங்கள் தேடியது "idol"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

  ஓமலூர்:

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

  அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

  அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.

  இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

  இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
  • பின்னர் மலர் தூவி மரியாதையும் செய்தனர்.

  திருத்துறைப்பூண்டி:

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செய்தனர்.

  இதில் ஒன்றிய செயலாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர் எழில் பாலகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர்சாமி, சிவ.மகேந்திரன், நகரதுணை செயலாளர்பூண்டி பிரசாந்த், பிரபாகரன், தாமோதரன், நாசர், கொடி ஜெயராமன்சாமிநாதன் கார்த்திகேயன்உள்ளிட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு பவானி ஆற்றில் பிள்ளையாரை கரைக்க சென்றபோது இளைஞர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #GaneshChaturthi
  ஈரோடு:

  நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாக, பூஜை செய்யப்பட்ட கணபதி சிலைகளை ஆற்றிலும், கடலிலும் கரைப்பது வழக்கம்.

  அதன்படி, திருப்பூர் மாவட்டம் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்து வந்துள்ளனர். அப்போது சிலையை ஆற்றில் கரைக்கும்போது எதிர்ப்பாராத விதமாக 3 இளைஞர்கள் ஆற்றில் விழுந்தனர்.

  உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடவே, ஒருவர் மீட்கப்பட்டார். மீட்கப்படாத இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வ வழிபாட்டு விழாக்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. #GaneshChaturthi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போனதாக கூறப்பட்ட வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #idolmissing
  சென்னை:

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

  அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

  இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

  அந்த மனுவில், ‘ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோசடி புகார் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. #Idolsmuggling
  பழனி:

  அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்குள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டதாகும். தினமும் அபிஷேகம் செய்வதால், இந்த சிலை சேதம் அடைவதாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மாத காலத்தில் அந்த சிலை அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

  இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ஸ்பதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை சென்னை தலைமையிட நகைமதிப்பீட்டு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலையை பெற்று பாதுகாப்பாக வைக்கும்படி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

  அதன்படி சிலையை கோர்ட்டுக்கு எடுத்து செல்ல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் சென்னை சென்றிருந்ததால் சிலையை போலீசாரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிலையின் சக்தியை இழக்க வைக்க பூஜைகளும் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து சிலையின் சக்தியை இழக்க வைக்கும் பூஜை மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில், கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

  பின்னர் ஐம்பொன் சிலையை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக சிலையின் எடை, உயரம் உள்ளிட்டவைகளை கோவில் அதிகாரிகள் அளவீடு செய்து விவரங்களை ஆவணங்களாக பதிவு செய்தனர்.

  இதைத்தொடர்ந்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டியை, மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு கோவில் அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதன் பின்பு கோவிலுக்கு சொந்தமான வாகனம் மூலம் ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டி, இடும்பன் கோவில் பை-பாஸ் சாலை வழியாக பாலாறு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

  அங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலை வைக்கப்பட்டு இருந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு ஐம்பொன் சிலை வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிலையின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சிலையின் எடை 221 கிலோ 100 கிராமும், உயரம் 3¾ அடி (111.5 சென்டி மீட்டர்) இருப்பதும் தெரியவந்தது.

  இந்த விவரங்களை சிலையை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதன்பிறகு சிலை வைக்கப்பட்ட பெட்டியை, வேனில் ஏற்றி கும்பகோணத்துக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

  பின்னர் அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்பு ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி முன்பு சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்து சிலையை எடை போட்டனர். அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

  இதனைத்தொடர்ந்து கும்பகோணம் கோர்ட்டுக்கு வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், கோர்ட்டு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு சென்றார். அங்கு சிலையை ஒப்படைத்த அவர், அந்த சிலை மீது எந்தவித குறிப்பும் எழுதக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார்.  #Idolsmuggling  #Tamilnews 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சிலை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது முக்கிய பிரமுகர்களுக்கோ உரிய முன் அனுமதி இல்லாமல் சிலைகள் நிறுவ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் எவரேனும் முன் அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து சிலை அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

  விழுப்புரம் மாவட்டத்தில் பொதுஅமைதியை குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும், எவரேனும் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சட்டத்தை மிறும் வகையில் அரசியல் தலைவர்களுக்கு சிலைவைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  சிலையை நிறுவ முற்படுவோர் மட்டுமின்றி, உரிய அனுமதியின்றி சிலையை உருவாக்கும், வடிவமைக்கும் நபர்கள் மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
  ×