search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swami"

    • கந்த சஷ்டி விழா நடந்தது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. தினமும் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்கார நிகழ்ச்சி நடை பெற்றது.

    முன்னதாக வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு பாலபிஷேகம் முடிந்த பின், ஜெயந்திநாதர் அலங்காரத்தில் முத்தா லம்மன் திடலில் எழுந்த ருளிய அவரை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். அங்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூர பத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் சுவாமி வேடமிட்டு பக்தர்கள் வலம் வந்தனர்.
    • குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    குலசேகரபட்டிணம் முத் தாரம்மன் கோவிலில் வரு கிற 24-ந்தேதி தசரா திரு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அங் குள்ள முத்தாரம்மனை வேண்டி கொண்டால் வேண்டியது நடக்கும் என் பது நம்பிக்கை. இதை யொட்டி, தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் தசரா அன்று தினம் முத்தாரம் மனை தரிசிக்க செல்வது வழக்கம்.

    அந்த வகையில், சிவ கங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகேயுள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த பக் தர்கள் வருடந்தோறும் தசரா திருவிழாவிற்கு காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி கள் வேடமிட்டு செல்வார் கள். இந்தாண்டு திருவிழா–விற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை குலசேகரபட்டினம் செல்ல உள்ளனர்.

    இதற்காக வேடமிட்ட பக்தர்கள் திருப்புவனம், புதூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வேடமிட்டு சென்று வழிபட்டனர். நோயாளி, அம்மன், பிச் சைக்காரன், குறத்தி உள் ளிட்ட வேடமிட்டு பக்தர் கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதுபற்றி பக்தாகள் கூறு கையில், குலசேகரபட்டினம் முத்தாரம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்த காரி யம் நிறைவேறும். நோய் தாக்குதல், விபத்தில் காயம டைந்தவர்கள் அம்மனை வேண்டி கொண்டு நலம் பெற்றால் நோயாளி வேட மிட்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். அதேபோல தொழிலில் நஷ் டம் அடைந்தவர்கள் பிச் சைக்காரன் வேடமிட்டு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். நாங்கள் இன்று வேடமிட்டு நகரை வலம் வந்துள்ளோம் என்றார்.

    ஒவ்வொரு வருடமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடமிட்டு வலம் வருவார் கள். சிவகங்கை மாவட்டத் தில் திருப்புவனம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர் கள் காளி மற்றும் சுவாமிகள் வேடமிட்டு ஆண்டு தோறும் குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    • சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.
    • சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார்

    சாமியார்கள் பலர் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு விதமான வேடங்களில் வாக்கு சொல்லும் சம்பவங்கள் ஏராளம்.

    ஆனால் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... எனக் கூறிக்கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே பொதுமக்களை ஏமாற்றி தெலுங்கானாவை ஒரு கலக்கு கலக்கி உள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த போலி சாமியார் சந்தோஷ் குமார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கு 2 மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    போலி சாமியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.

    அப்போது சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார். மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறினார்.

    மேலும் 5 தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் விஷ்ணுவை போல் படுத்துக் கொண்டு தனது 2 மனைவிகள் கால் அமுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்தும் நான் கடவுள் என கூறி வந்தார்.

    சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே சிலர் தகவல் பரப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொடிதொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆவேசமான சாமியார் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... என கத்தினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

    சித்தர்களின் பூமியான திருவண்ணாமலையில் ஏராளமான சாமியார்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் பொதுமக்களை எளிதில் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு கோமாளி வேலைகளில் ஈடுபட்டு காமெடி சாமியார்களாக மாறி உள்ளனர்.

    அந்த வரிசையில் தற்போது போலி சாமியார் சந்தோஷ் குமார் இடம் பிடித்துள்ளார்.

    மகாவிஷ்ணு வேடத்தில் 2 மனைவிகளை காலடியில் அமர வைத்துக் கொண்டு இருக்கும் படங்கள் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் சினிமா பாடல்கள் பின்னணியில் காமெடியாக பரவ விட்டுள்ளனர்.

    இந்த வீடியோ படங்கள் திருவண்ணாமலை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... மொத்தமும் திருவண்ணாமலை பக்கம் இருந்தே வருவீங்களா... எங்கள பாத்தா என்ன வேற மாதிரி தெரியுதா என சமூக வலைதளங்களில் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

    தெலுங்கானாவை கலக்கிய போலி சாமியார் தற்போது காமெடி போர்வையில் திருவண்ணாமலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுவாமி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே சக்தி பாபா கோவில் உள்ளது. இங்கு ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் நூதன விக்கிரக பிரதிஷ்டை விழா நடந்தது.

    முன்னதாக கணபதி நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, 2-ம் கால பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆதிவராகி அம்மன், நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர். சந்தனம் இளநீர் பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    • தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் முதல்முறையாக அய்யா வைகுண்டர் புதுவை பதி என்ற பெயரில் அமைந்துள்ள கோவில் திருநடை திறப்பு விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் முதல்முறையாக அய்யா வைகுண்டர் புதுவை பதி என்ற பெயரில் அமைந்துள்ள கோவில் திருநடை திறப்பு விழா நடைபெற்றது.

    பாகூரை அடுத்த அரங்கனூரில் எரமுடி அய்யனார் கோவில் அருகில் உள்ள அய்யா பதி திருநடை திறப்பு விழாவில் நேற்று பள்ளியுணர்த்தல், அய்யாவுக்கு பால் வைத்தல், உகப்படிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அய்யாவுக்கு பணிவிடை மற்றும் உச்சிபடிப்பு நிகழ்ச்சி பிற்பகலில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    தொடர்ந்து நடந்த அன்னதானத்தை பவர் சோப் நிர்வாக இயக்குனர் தனபால் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலையில் பணிவிடை மற்றும் உகபடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கடலூர், விழுப்புரம், புதுவையில் இருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்டர் புதுவை பதி அய்யாவழி பக்தர்கள் செய்து இருந்தனர்.

    ×