search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்புவனம் வைகை வடகரை பகுதியில்  சுவாமி வேடமிட்டு வலம் வந்த பக்தர்கள்
    X

    குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு செல்லும் மானாமதுரை பக்தர்கள் பல்வேறு வேட மணிந்து நகரை வலம் வந்த காட்சி.

    திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் சுவாமி வேடமிட்டு வலம் வந்த பக்தர்கள்

    • திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் சுவாமி வேடமிட்டு பக்தர்கள் வலம் வந்தனர்.
    • குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    குலசேகரபட்டிணம் முத் தாரம்மன் கோவிலில் வரு கிற 24-ந்தேதி தசரா திரு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அங் குள்ள முத்தாரம்மனை வேண்டி கொண்டால் வேண்டியது நடக்கும் என் பது நம்பிக்கை. இதை யொட்டி, தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் தசரா அன்று தினம் முத்தாரம் மனை தரிசிக்க செல்வது வழக்கம்.

    அந்த வகையில், சிவ கங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகேயுள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த பக் தர்கள் வருடந்தோறும் தசரா திருவிழாவிற்கு காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி கள் வேடமிட்டு செல்வார் கள். இந்தாண்டு திருவிழா–விற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை குலசேகரபட்டினம் செல்ல உள்ளனர்.

    இதற்காக வேடமிட்ட பக்தர்கள் திருப்புவனம், புதூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வேடமிட்டு சென்று வழிபட்டனர். நோயாளி, அம்மன், பிச் சைக்காரன், குறத்தி உள் ளிட்ட வேடமிட்டு பக்தர் கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதுபற்றி பக்தாகள் கூறு கையில், குலசேகரபட்டினம் முத்தாரம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்த காரி யம் நிறைவேறும். நோய் தாக்குதல், விபத்தில் காயம டைந்தவர்கள் அம்மனை வேண்டி கொண்டு நலம் பெற்றால் நோயாளி வேட மிட்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். அதேபோல தொழிலில் நஷ் டம் அடைந்தவர்கள் பிச் சைக்காரன் வேடமிட்டு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். நாங்கள் இன்று வேடமிட்டு நகரை வலம் வந்துள்ளோம் என்றார்.

    ஒவ்வொரு வருடமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடமிட்டு வலம் வருவார் கள். சிவகங்கை மாவட்டத் தில் திருப்புவனம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர் கள் காளி மற்றும் சுவாமிகள் வேடமிட்டு ஆண்டு தோறும் குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×