search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் உருவசிலை அமைப்பதற்கான பூமிபூஜை
    X

    சிலை அமைப்பதற்கான பூமிபூஜையை மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் உருவசிலை அமைப்பதற்கான பூமிபூஜை

    • மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
    • 25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

    மாநிலத் தலைவர் மூர்த்தி, வழக்கறிஞர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுப்ரமணியன், அன்பான ந்தம், வேலூர் முருகேசன், சங்கர், திருவண்ணாமலை சுப்பிரமணியம், தஞ்சை முனிசிபல் காலனி நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாநிலத் தலைவர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சையில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைக்க அனுமதி கொடுத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே .என். நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பணிக்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மேயர் சண். ராமநாதனுக்கும் நன்றி. மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிவு அடைந்ததும் சிலையை விரைவில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.

    Next Story
    ×