search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரி"

    • திருச்சி அருகே நள்ளிரவில் பேக்கரி மற்றும் மருந்து கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்
    • கார்த்திகேயன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்


    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் பேக்கரி மற்றும் அதனை ஒட்டி தனியார் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

    இதில் திருவெறும்பூர் கன்னிமார் கோவில் தெரு வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 39) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு மேற்கண்ட பேக்கரி மற்றும் மருந்தகங்களை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பேக்கரி மற்றும் மருந்தகங்களின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பேக்கரி கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.58 ஆயிரம் மற்றும் மருந்தகத்தில் வைத்திருந்த ரூ.6,000, ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கார்த்திகேயன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பிரபல பேக்கரி மற்றும் மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி செயல்பட்டு வருகிறது.
    • 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பேக்கரி கேசியர் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

    கோவை

    கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன் நகரை சேர்ந்தவர் ரவி (48).

    இவர் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் வழக்கம்போல ரவி பேக்கரியில் வேலையை கவனித்து கொண்டிருந்தார்.

    அப்போது பேக்கரிக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பேக்கரி கேசியர் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

    அவர் கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரவியிடம் இருந்து ரூ.2,400 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

    இது குறித்து ரவி காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கத்தி முனையில் பறித்த நபர்கள் குறித்து விசாரித்தனர்.

    இதில், பணம் பறித்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஸ்டீபன்ராஜ்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு வாலிபர் பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொடுமுடி அருகே துணிகரம் பேக்கரியில் செல்போன் திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் காச்சக்கார மேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாண்சக்கரவர்த்தி (25). அதேபகுதியில் உள்ள நால் ரோட்டில் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது பேக்கரி கடைக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து டீ கேட்டார்.

    கல்யாண் சக்கரவர்த்தி அந்த நபருக்கு டீ போட்டுக்கொடுத்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு மற்றொரு நபருக்கு டீ போட சென்றுவிட்டு மீண்டும் தனது கல்லா பெட்டி அருகே வந்தார்.

    அப்போது அங்கு வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் இருக்கும்.

    டீ கேட்டு வந்த நபர் மீது சந்தேகம் அடைந்த கல்யாண்சக்கரவர்த்தி அந்த நபரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் அந்த நபர் வேகமாக சென்றார்.

    உடனடியாக கல்யாண் சக்கரவர்த்தி அங்கு இருந்த–வர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரி த்ததில் அவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்கிற சேகர் என தெரியவந்தது. அவர் செல்போன் திருடி–யதை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து சேகரை மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×