search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமானுக்கு"

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. தேவாரம் - திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமா னுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூரில்‌ மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி அடியார்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
    • நடராஜ பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடும், இரவு 7 மணிக்கு ‌‌பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி அடியார்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிவகாமித்தாயார் உடனுறை நடராஜ பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடும், இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடல்கள் பாராயணம் நடைபெற்றது. 10 மணிக்கு 2-ம் கால வழிபாடும்,12 லிங்கோத்பவர் சிறப்பு வழிபாடும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால வழிபாடும் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமி தாயார் உடனுறை நவராஜ பெருமான் பள்ளியரை வழிபாடும், 6 மணிக்கு 4-ம் கால வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×