search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து"

    • மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வென்று ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

     

    முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

    இந்த போட்டியில் 1-3 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி அமோக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின.
    • மூன்றாவது இடத்துக்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி முடிவில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது. காலிறுதி ஆட்டங்களை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 15) முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

     

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியிாக ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

    • காலிறுதியில் பிரான்சை 7-6 என பெனால்டி ஷூட்அவுட்டில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
    • கொலம்பியாவை 2-1 என இங்கிலாந்து வீழ்த்தியது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் போட்டி நேரத்தில் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது.

    இன்றும் நாளையும் ஓய்வு நாள். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15-ந்தேதி) முதல் அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் ஸ்பெயின்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16-ந்தேதி புதன்கிழைமை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டி சனிக்கிழமையும் (19-ந்தேதி), இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (20-ந்தேதி) நடைபெற இருக்கிறது.

    • ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 1-1 என கோல் அடித்திருந்தது
    • கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து வெற்றி

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இரண்டு அணி வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்பெயின் வீராங்கனைகள் இலக்கை நோக்கி பந்து கடத்தி சென்றனர். இருந்தாலும் முதல் பாதி நேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் மரியானோ கால்டென்டே கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

    பிறகு 90 நிமிடம் வரை நெதர்லாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்படும். அந்த நேரத்தில் (91-வது நிமிடம்) நெதர்லாந்து வீராங்கனை ஸ்டெபானி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

    நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தலா 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலிஸ்டெ பராலுயெலோ அயுங்கோனா கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை நெதர்லாந்து வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    எனவே, ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு 8 முறையும், நெதர்லாந்து அணிக்கு 2 முறையும கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    நெதர்லாந்து வீராங்கனைகள் இரண்டு முறை ஆஃப்சைடு, ஸ்பெயின் வீராங்கனைகள் ஆஃப்சைடு செய்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இலக்கை நோக்கி ஸ்பெயின் 8 முறையும், நெதர்லாந்து 4 முறையில் பந்தை அடித்தன. பந்து 62 சதவீதம் ஸ்பெயின் வசமே இருந்தது.

    • 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை
    • 12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.

    தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று கடைசி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் கொலம்பியா- ஜமைக்கா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 1-0 என ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்- மொரோக்கோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 4-0 என மொரோக்கோவை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதி ஆட்டங்கள் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றன. 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    • ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    இன்று சி பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜப்பான் வீராங்கனையான ஹினாட்டா இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். முதல் கோலை 12-வது நிமிடத்திலும், 2-வது கோலை 40-வது நிமிடத்திலும் அடித்தார். மேலும் 29-வது நிமிடத்தில் ரிகோவும் 82-வது நிமிடத்தில் மினா டனாகாவும் கோல் அடித்தனர்.

    இறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

    இதனை தொடர்ந்து சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜாம்பியா நாடுகள் மோதின. இதில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையில் ஜாம்பியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

    • நார்வே, நியூசிலாந்து அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தன
    • கோல்கள் அடிப்படையில் நார்வே அணி முன்னேற்றம்

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ் அணிகள் இடம்பிடித்திருந்தன. நான்கு அணிகளிலும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின.

    அதன்முடிவில், நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. சுவிட்சர்லாந்து 2 போட்டிகளில் டிரா செய்திருந்ததால் 5 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    நார்வே, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு டிராவுடன், தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் நார்வே 6 கோல்கள் அடித்திருந்தது. 1 கோல் விட்டுக்கொடுத்திருந்தது. நியூசிலாந்து ஒரு கோல் அடித்து ஒரு கோல் விட்டுக்கொடுத்திருந்தது.

    இதனால் கோல்கள் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி நர்வே 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேளியுள்ளது.

    'பி' குரூப்பில் நைஜீரியா, கனடா, ஆஸ்திரேலியா இடையெ கடும் போட்டி நிலவுகிறது.

    'சி' பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் அணிகள் ஏறக்குறைய நாக்அவுட் சுற்றை உறுதி செய்துவிட்டன.

    • ஜெர்மனி 6-0 என மொரோக்கோ அணியை வீழ்த்தியது
    • பிரேசில் பனாமாவை 4-0 என பந்தாடியது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இத்தாலி 1-0 என வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் மொரோக்கோ அணியை ஜெர்மனி துவம்சம் செய்து 6-0 என வெற்றி பெற்றது. அதேபோல் பனாமா அணியை 4-0 என பிரேசில் வீழ்த்தியிருந்தது.

    இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் கொலம்பியா- தென்கொரியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய நேரப்படி 11 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதியம் ஒன்றரை மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் விளையாடுகின்றன.

    • போர்ச்சுக்கல் 0-1 எனத் தோல்வியை தழுவியது
    • ஜமைக்காவுக்கு எதிராக பிரான்ஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லை

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுவீடன் 2-1 எனவும், போர்ச்சுக்கல் அணிக்கு எதிராக நெதர்லாந்து 1-0 எனவும் வெற்றி பெற்றன. பிரான்ஸ்- ஜமைக்கா இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

    இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகளும், மதியம் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி மொரோக்கோ அணிகளும், மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் பனமா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • ஸ்பெயின் 3-0 என கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது
    • நைஜீரியா- கனடா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து- பிலிப்பைன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-0 என வெற்றி பெற்றது.

    'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின்- கோஸ்டா ரிகா இடையிலான போட்டியில் ஸ்பெயின் 3-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள நைஜீரியா- கனடா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    'ஏ' மற்றும் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் தலா ஒரு போட்டிகளில் விளையாடிவிட்டன. 'ஏ' பிரிவில் சுவிட்சர்லாந்து முதல் இடத்திலும், பி பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் உள்ளன.

    தற்போது அமெரிக்கா- வியட்நாம் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. அதன்பின் ஜப்பான்- ஜாம்பியா (இந்திய நேரப்படி 12.30), இங்கிலாந்து- ஹெய்தி (15.00), டென்மார்ச்- சீனா (17.30) அணிகள் விளையாடுகின்றன.

    • ஆஸ்திரேலியா 1-0 என அயர்லாந்து அணியை வீழ்த்தியது
    • நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை தோற்கடித்தது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. குரூப் 'ஏ' சுற்றில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நார்வே அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹன்னா விகின்சன் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஸ்டெபானி காட்லே கோல் அடித்தார்.

    இன்று மூன்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நைஜீரியா- கனடா அணிகள், 2-வது போட்டியில் பிலிப்பைன்ஸ்- சுவிட்சர்லாந்து அணிகள், 3-வது போட்டியில் ஸ்பெயின்- கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.

    32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதிவரை நடைபெறுகிறது. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் இருந்தும் முதல் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். 

    ×