search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா- இத்தாலி; பிரேசில்- பனமா அணிகள் இன்று பலப்பரீட்சை
    X

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா- இத்தாலி; பிரேசில்- பனமா அணிகள் இன்று பலப்பரீட்சை

    • போர்ச்சுக்கல் 0-1 எனத் தோல்வியை தழுவியது
    • ஜமைக்காவுக்கு எதிராக பிரான்ஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லை

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுவீடன் 2-1 எனவும், போர்ச்சுக்கல் அணிக்கு எதிராக நெதர்லாந்து 1-0 எனவும் வெற்றி பெற்றன. பிரான்ஸ்- ஜமைக்கா இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

    இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகளும், மதியம் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி மொரோக்கோ அணிகளும், மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் பனமா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    Next Story
    ×