search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூடான் பிரதமர்"

    • பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இந்தியா வந்தடைந்தார்.
    • பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.

    பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இரவு சந்தித்தார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    • ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் இன்று இந்தியா வந்துள்ளார்.
    • ஷேரிங் டோப்கே ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.

    புதுடெல்லி:

    பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார்.

    இந்நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கே இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.

    பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்.
    • ஷேரிங் டோப்கோ ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.

    புதுடெல்லி:

    பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கோ நாளை இந்தியா வருகிறார்.

    தலைநகர் டெல்லி வரும் ஷேரிங் டோப்கோ ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    ஐந்து நாள் பயணமாக இந்தியா வரும் டோப்கோ தனது பயணத்தின்போது மும்பைக்கு செல்கிறார். டோப்கேவுடன் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.

    இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு கொண்டு இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×