search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித நீர்"

    • பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    பழமையான இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்ன தாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிதிலமடைந்த இக்கோ வில் திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.

    தொடர்ந்து திங்கட்கிழமை விக்னே ஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை பூஜை கள் தொடங்கியது.

    விழா அன்று நான்கு காலயாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணா ஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாளனசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான கலசத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    இதில் திருஞானச ம்பந்த தம்பிரான் சுவா மிகள், சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சாமிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன் நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், டெம்பிள் டவுன் ரோட்டரி சேர்ந்த வீரபாண்டியன், ரோட்டரி சங்கம் சுசீந்திரன், மகாலிங்கம், திமுகவை சேர்ந்த அண்ணா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித தீர்த்தங்கள் கடங்களில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
    • கோபுர கலசங்களுக்கு சிறப்பு மந்திர பூஜைகள் செய்யப்பட்டு புனித கடங்களில் உள்ள நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே தலைஞாயிறு என்ற ஊரில் குற்றம் பொறுத்த நாதர், கோல்வளை நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவார பதிகம் பாடல் பெற்றதும் ராஜராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் உள்ளிட்ட மன்னர் காலத்து 12கல்வெட்டுகள் அமையப்பெற்றதும், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சூரியன் வழிபட்டு இழந்த வலிமையை பெற்றார்.

    சூரியனின் வேறு பெயரான ஞாயிறு என்ற பெயரிலேயே தலைஞாயிறு என்று இந்த ஊருக்கு பெயர் வரகாரணம் என்று புராண வரலாறு கூறுகிறது.

    சூரிய தீர்த்தம் உள்ளிட்ட 8 தீர்த்தங்கள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

    சூரியன், அங்கிரஸ் கௌதமர், வாமதேவர், உள்ளிட்ட 72 முனிவர்கள், ராவணன் அனுமன் விசித்திராங்கன் உள்ளிட்டோர் ஆலயத்தை வழிபட்டு உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.

    இக் கோவிலின் கும்பாபிஷேகம் 1953ம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது.

    அதன் பின்னர் தற்போது ஆன்மீக அன்பர்கள் உதவியுடன் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

    சுவாமி அம்பாள் விநாயகர் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அங்கு புனித தீர்த்தங்கள் கடங்களில் வைக்கப்பட்டுயாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

    6ம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் நிறைவடைந்தது.

    தொடர்ந்து புனித கடம் புறப்பாடு மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    தருமபுர ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித கடம் ஊர்வலம் கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு மந்திர பூஜைகள் செய்யப்பட்டு புனித கடங்களில் உள்ள நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் வேளாக்குறிச்சி ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், மலேசிய தொழிலதிபர்டத் தோ.கலைச்செல்வன், தருமையாதீன பொது மேலாளர் கோதண்டராமன், ஆதீன வேத சிவாகம பாடசாலை நிர்வாக இயக்குனர் குரு சம்பத், கல்லூரி செயலாளர் செல்வநாயகம், தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர் வட.வீரபாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • லக்ஷ்மி நரசிம்மரும், கோதண்டராமர் சாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
    • புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அருகே உள்ள ஞானபுரி சித்திரக்கூட சேத்திரம் ஸ்ரீசங்கரஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் 33 அடி உயர விஸ்வரூபமாக அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயர் சுவாமிக்கு அருகே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், ஸ்ரீகோதண்டராமர் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் கோலத்தி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, சூரிய நாராயண பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடம் கோவிலைச் சுற்றி வந்து கோலத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. மேலும் மூலவர் கோலத்தி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×