search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்"

    • சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த 28-ம் நிலை வீரரான டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

    இதில் சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதுகிறார்.

    எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார். 23 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), 6-வது வரிசையில் உள்ள ஹோல்கர் ருனே (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) ஹாதத்மையா (பிரேசில்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

    • உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனையை வென்றார்.
    • காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் துனிசியா வீராங்கனை ஓன்ஸ் ஜபேர், அமெரிக்கா வீராங்கனை பெர்னார்டா பெராவுடன் மோதினார். இதில் ஜபேர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப், ஸ்லோவோகினியாவின் அன்னா கரோலினாவுடன் மோதினார். இதில் கஃப் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியாவுடன் மோதினார்.

    முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 5-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது உடல்நலக் குறைவால் லெசியா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

    • ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.
    • இதில் ரூட் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயைச் சேர்ந்த காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோவுடன் மோதினார்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை ரூனே 7-6 (10-7) என வென்று, காலிறுஇதிக்கு முன்னேறினார்.

    • ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் நான்காவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறார்.

    • 4-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாசுடன் மோதினார்.
    • இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாசுடன் மோதினார்.

    தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 26-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபவாலோவை எதிர் கொண்டார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 26-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபவாலோவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-1 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.அவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள லாரன்சோ முசட்டியை (இத்தாலி) சந்திக்கிறார்.

    5-ம் நிலையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஸ்வார்ட்ஸ் மேனை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 3-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா), செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
    • கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 6-2, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபோவுடன் மோதுகிறார்.

    அதுபோல டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா), மார்கோஸ் ஜிரோன் (அமெரிக்கா) நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஓசியன் டோடினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் சக நாட்டு வீராங்கனை லிண்டா நோஸ்காவுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் லியூவுடன் மோதினார். இதில் 6-4, 6-0 என்ற செட்

    கணக்கில் வென்று ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார்.
    • ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார். 

    அனா பிளின்கோவா

    அனா பிளின்கோவா

    ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), முதல் நிலை வீரரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் ஹங்கேரி வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.

    முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வென்றார். 2வது செட்டை டேனியல் 6-3 என வென்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×