search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிட்டன்"

    சொந்த கட்சியினரே கிளர்ச்சியை தொடங்கிய நிலையில், என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது என எதிர்ப்பாளர்களுக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். #Brexit
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரேசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

    மேலும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரேசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா எதிர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். 

    அதில், “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது”என அவர் தெரிவித்துள்ளார்.
    பிரெக்ஸிட் விவகாரத்தில் டேவிட் டேவிஸ் இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், சிறிது நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பதவியில் இருந்து விலகியுள்ளார். #Brexit #BorisJohnson #UK
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்ணின் துணைக்கு ஹாங்காங் அரசு விசா மறுத்து வந்த நிலையில், துணை விசா வழங்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #HongKong #QT
    சென்ட்ரல்:

    பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஜோடி க்யூ.டி என்று பெயரின் முதல் எழுத்தால் குறிப்பிடப்பட்டனர். 2011-ம் ஆண்டு முதல் இந்த ஜோடி சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2014-ம் ஆண்டில் டி என்பவருக்கு ஹாங்காங்கில் பணி கிடைத்துள்ளது. ஆனால், அவரது வாழ்க்கைத்துணையான க்யூவுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.

    துணை விசா என்பது வாழ்க்கைத்துணைவிக்கு வழங்கப்படும் விசா ஆகும். இதன் மூலம் ஒரே விசாவில் தம்பதிகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், க்யூடி தம்பதிக்கு இந்த விசா மறுக்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கு எதிராக கீழ்கோர்ட்டில் இந்த ஜோடி வழக்கு தொடர்ந்தனர்.

    தீர்ப்பு க்யூதம்பதிக்கு சாதகமாக வந்தாலும், அரசு அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மூன்றாண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. க்யூடி ஜோடிக்கு துணை விசா வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கோல்ட்மேன் சாச்ஸ், மோர்கன் ஸ்டான்லே போன்ற பல நிறுவனங்கள் இந்த ஜோடிக்கு ஆதரவாக இருந்தது. ஆண், பெண் என்ற பாகுபாடு பார்ப்பது ஹாங்காங்கில் சட்டவிரோதம் என்றாலும், அங்கு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி இல்லை. 

    ஹாங்காங்கிற்கு செல்லலாமா? என்பதைத் தீர்மானிக்கும் நபர்களிடம், சார்ந்திருக்கும் திறனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர். 
    பிரிட்டனில் ரஷிய உளவாளியை நச்சுப்பொருள் தாக்குதல் மூலம் சமீபத்தில் கொல்ல முயற்சி நடந்தது போல, சாலிஸ்பரி பகுதியில் இன்று ஒரு நச்சுப்பொருள் தாக்குதல் நடந்துள்ளது. #Salisbury
    லண்டன்:

    பிரிட்டனின் சாலிஸ்பரி நகரத்தில் இருக்கும் அமெஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை அடுத்து, சாலிஸ்பரி பகுதி முழுவதும் உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் குறித்தான விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

    சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்கு உளவு பார்த்த ரஷியாவை சேர்ந்த உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீதும் இதே போன்ற நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை கொலை செய்யும் நோக்கில் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா மீது பிரிட்டன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
    நான் முக்கியமா? இல்லை நாய்கள் முக்கியமா? என்ற கேள்விக்கு நாய்கள் தான் முக்கியம் என மனைவி பதிலளித்ததால் அதிர்ச்சியில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டனின் சப்போல்க் பகுதியில் வசிப்பவர் மைக் ஹாஸ்லாம். 53 வயதான இவரது மனைவி லிஸ் (49) நாய்கள் பிரியர். 1991-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு 21 வயதில் தற்போது மகன் உள்ளார். இந்நிலையில், நாய்களின் காரணமாக மைக் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    லிஸியின் தந்தை விலங்குகளுக்கான உணவு விற்கும் தொழில் செய்து வந்ததன் காரணமாக சிறுவயது முதலே லிஸ் விலங்குகள் பிரியராக இருந்துள்ளார். சமீபத்தில், 30-க்கும் மேற்பட்ட நாய்களை லிஸ் கண்டெடுத்து வளர்த்து வந்துள்ளார். எந்த நேரமும் நாயுடனே அவர் நேரத்தை செலவிட்டுள்ளார்.

    பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் பொங்கி எழுந்த மைக், “நான் முக்கியமா, இல்லை நாய்கள் முக்கியமா?” என கோபத்துடன் கேட்க, நாய்கள்தான் முக்கியம் என லிஸ் கூலாக பதில் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மைக் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக கூறியுள்ளார்.

    வீட்டை விட்டு வெளியேறினால் தன்னை மனைவி தடுத்துவிடுவார் என நினைத்த மைக்-க்கு அடுத்த அதிர்ச்சியாக, “உங்கள் உடமைகளை பேக் செய்யவா?” என லிஸ் கேட்க புலம்பிய படியே வீட்டை விட்டு அவர் வெளியேறினார். “என்னைப்பற்றி மைக்-க்கு நன்றாக தெரியும். ஆனாலும், அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. விதவையாக வாழ விரும்பவில்லை. அதனால், என்னை எனது நாய்களிடம் நான் ஒப்படைத்துவிட்டேன்” என லிஸ் கூறியுள்ளார்.
    ×