search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம் ஓய்வு"

    • திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
    • ஓட்டுச்சாவடிகளில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் பட்டு வரும் தேர்தலில் இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. 26-ந்தேதி நடந்த 2-வது கட்ட தேர்தலில் 88 தொகுதிகளில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானது.

    கடந்த 7-ந்தேதி 3-வது கட்டமாக தேர்தல் நடந்த 94 தொகுதிகளில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 13-ந்தேதி 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 69.16 சதவீத வாக்குகள் பதிவானது.

    மொத்தத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் 4 கட்ட தேர்தலில் சுமார் 45 கோடி பேர் வாக்களித்து இருக்கிறார்கள்.

    அடுத்து வருகிற திங்கட் கிழமை 5-வது கட்ட தேர்த லும், 25-ந்தேதி 6-வது கட்ட தேர்தலும் ஜூன் 1-ந்தேதி 7-வது கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. தற்போது 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் 49 தொகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது.

    பீகார், ஜார்க்கண்ட், மராட்டியம், ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டமாக உள்ளது.

    5-வது கட்ட தேர்தலில்தான் ராகுல் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 49 தொகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்படும். திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    இதையொட்டி 49 தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடிகளில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • 4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன.

    இதில் தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

    • அதிக இடங்களில் வெற்றி பெற பாஜ.க. இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் முதல் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    4-வது கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் 93 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்தது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்த லுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 நாட்களாக பிரசாரம் தீவிரமானது.

    தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய உள்ளது.

    பிரசாரத்துக்கு 2 நாட்களே அவகாசம் இருப்பதால் 96 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆனால் நவீன் பட்நாயக்கிடம் இருந்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த மாநி லங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜ.க. இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்கு 4-வது கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாஜ.க. கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் முக்கியமாக கருதி, பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    ×