search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 states"

    • 4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன.

    இதில் தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

    • அதிக இடங்களில் வெற்றி பெற பாஜ.க. இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் முதல் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    4-வது கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் 93 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்தது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்த லுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 நாட்களாக பிரசாரம் தீவிரமானது.

    தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய உள்ளது.

    பிரசாரத்துக்கு 2 நாட்களே அவகாசம் இருப்பதால் 96 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆனால் நவீன் பட்நாயக்கிடம் இருந்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த மாநி லங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜ.க. இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்கு 4-வது கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாஜ.க. கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் முக்கியமாக கருதி, பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி நாளை தொடங்கி 5 நாட்களுக்குள் 10 மாநிலங்களில் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மோடி, அமித்ஷா இருவரும் வியூகங்களை வகுத்து கடந்த மாதமே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். மத்திய மந்திரிகளும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். முதல் கட்டமாக 10 மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அவரது பிரசார பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி 5 நாட்களுக்குள் பிரதமர் மோடி 10 மாநிலங்களிலும் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல் நாளான நாளை (8-ந்தேதி) அவர் சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு பிரதமர் மோடி நாளைதான் முதன் முதலாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். அம்மாநிலத்தில் ராய்கர் நகரில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

    சத்தீஸ்கர் மாநில பிரசாரத்தை முடித்துவிட்டு மோடி மேற்கு வங்காளம் செல்கிறார். அங்கு  ஜல்பைபுரி நகரில் நடக்கும் கூட்டத்தில் மோடி பேசுகிறார். கடந்த வாரமும் பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு சென்று பிரசாரம் செய்திருந்தார்.

    அவர் தவிர பா.ஜனதா மூத்த தலைவர்கள் அம்மாநிலத்துக்கு அடுத்தடுத்து சென்றபடி இருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தி பிரதமர் மோடியும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் அங்கு பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இது மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.



    மம்தாவை மேலும் எரிச்சல்படுத்தும் வகையில் நாளை பிரதமர் மோடி மீண்டும் அம்மாநிலத்தை குறி வைத்து செல்கிறார். அங்கு பிரசாரம் முடிந்ததும் மோடி அசாம் மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு பிரசாரம் செய்துவிட்டு இரவில் அசாம் மாநிலத்தில் தங்குகிறார்.

    9-ந்தேதி (சனிக்கிழமை) காலை அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரம்மபுத்திரா நதி மீது புதிதாக கட்டப்பட இருக்கும் பாலத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    இது தவிர எய்ம்ஸ் மருத்துவமனை, வடகிழக்கு மாநிலங்களை தேசிய திட்டத்துக்குள் இணைக்கும் புதிய சமையல் கியாஸ் இணைப்புத் திட்டத்துக்கும் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

    அசாம் மாநில நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிரதமர் மோடி அருணாசல பிரதேசத்துக்கு செல்கிறார். அங்கு புதிய பசுமை திட்ட விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு அங்கு நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்.

    இதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலத்துக்கு சென்று அங்கு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கு பிரசாரம் செய்து முடிந்ததும் அன்றிரவே டெல்லி திரும்புகிறார்.

    மூன்றாவது நாள் அதாவது 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். திருப்பூரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    திருப்பூரில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் திட்டப் பணியின் நிறைவு பகுதியான வண்ணாரப்பேட்டை வரையிலான ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். 10-ந்தேதி திருப்பூர் வரும் மோடியை வரவேற்க தமிழக பா.ஜனதா தலைவர்கள் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    10-ந்தேதி திருப்பூர் கூட்டத்தில் பேசி முடித்த பிறகு பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் செல்கிறார். அங்கு ஹப்பள்ளி நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு ஆந்திராவில் குண்டூரில் நடக்கும் கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

    ஆந்திரா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அன்றிரவே டெல்லி திரும்பும் மோடி அதற்கு அடுத்த நாள் அதாவது 11-ந்தேதி (திங்கட்கிழமை) உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு மதுராவில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    மதுராவில் “அட்சயபாத்திரம் அறக்கட்டளை” அமைப்பு சார்பில் நாடு முழுவதும் தினமும் 18 லட்சம் சிறுவர்-சிறுமியருக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மதிய உணவு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அப்போது சில குழந்தைகளுக்கும் மோடி தன் கைப்பட மதிய உணவு பரிமாறுவார் என்று தெரிய வந்துள்ளது.

    மதுரா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு உத்தரபிரதேசத்தில் நடக்கும் வேறு சில நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார். அவருடன் உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். மோடியின் வருகையால் உத்தரபிரதேச பா.ஜனதாவில் புத்துணர்ச்சி உருவாகும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    11-ந்தேதி உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பும் பிரதமர் மோடி 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அரியானா மாநிலத்துக்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    அன்றைய தினம் அரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்திர மாவட்டத்தில் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து கிராம பஞ்சாயத்து பெண் தலைவிகள் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண் பஞ்சாயத்து தலைவிகள் மத்தியில் பேசுகிறார். அந்த கூட்டம் முடிந்ததும் அவர் டெல்லி திரும்புகிறார்.

    பிப்ரவரி 3-வது வாரத்தில் இருந்து பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் மேலும் விறுவிறுப்பு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #PMModi
    ×