search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரகாஷ் ராஜ்"

    • மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
    • கோவா திரைப்பட விழாவில் இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.

    53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

    நாடவ் லேபிட்

    நாடவ் லேபிட்

     

    அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     

    தி காஷ்மீர் பைல்ஸ் - பிரகாஷ் ராஜ்

    தி காஷ்மீர் பைல்ஸ் - பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில் நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது. சும்மா கேட்கிறேன் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிடைத்து வருகிறது.

    தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்‌ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
    • தற்போது அக்‌ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார்.


    ரிச்சா சதா

    இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து  தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    அக்‌ஷய் குமார்

    இதனிடையே நடிகர் அக்‌ஷய் குமார், ரிச்சா சதாவின் "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.


    பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்‌ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது" என அக்‌ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரகாஷ் ராஜ்.
    • இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் தீவிர அரசியல் விமர்சனம் செய்வது குறித்து பேசியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்.

     

    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

    என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது" என்றார்.

    • நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
    • இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.

    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.

     

    விஷால்

    விஷால்

    நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

     

    பிரதமர் மோடி - விஷால்

    பிரதமர் மோடி - விஷால்

    அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

     

    பிரகாஷ் ராஜ் 

    பிரகாஷ் ராஜ் 

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "ஷாட் ஓகே... அடுத்து" என கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. 

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.


    விஜய் - பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாரிசு படத்தில் உங்கள் காதாபாத்திரம் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், "செல்லத்தோட வேலை பார்த்து கிட்டத்தட்ட 15 வருடம் ஆகிவிட்டது. இது ஒரு நல்ல படம். கதையை சொல்லனுமா? வேண்டாமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நானும் செல்லமும் திரும்ப சேர்ந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    • டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
    • இவர் சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.

    கே.பாலசந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். அதன்பின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் அனைவரையும் கவர்ந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது அரசியல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும், பா.ஜ.க. அரசு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல விமர்சனங்களை வைத்து வருகிறார்.


    பிரகாஷ் ராஜ் பதிவு

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராமர், ஆஞ்சநேயர், அசோக சின்னத்தில் இருக்கும் சிங்கங்களின் முகம் ஆகியவற்றின் முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படக்களை பதிவிட்டு "நாடு எங்கே செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் தேசிய சின்னமான நான்கு சிங்கங்களை கொண்ட முத்திரையின் வெண்கல சிலை பழைய சிங்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது அதனை சுட்டிக்காட்டும் விதமாக கருத்தை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ்.
    • இவர் நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

    கே.பாலசந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். அதன்பின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் அனைவரையும் கவர்ந்தார்.


    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் திரையுலகில் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் பிரகாஷ் ராஜ் வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×