search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் மாற்றம்"

    • உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை.
    • 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இதனால் 384 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர். 

    அதனால் 334 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பந்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

    பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பந்தை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.

    ×