search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரம்பரிய"

    • ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
    • ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் கென்னடி, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஊட்டச்சத்து திருவிழாவில் ஏற்காட்டில் உள்ள 9 ஊராட்சியில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு ராகி, சாமை, வரகு போன்ற பல்வேறு தானியங்களை வைத்து தயாரித்த பாரம்பரிய உணவு வகைகளை பார்வைக்கு வைத்தனர். இந்த உணவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுவைத்து பார்த்து சிறப்பாக செய்திருந்த 3 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.

    இதன்படி ஏற்காடு ஊராட்சியை சேர்ந்த பி.எல்.எப் குழு, மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பனித்துளி மகளிர் குழு, வெள்ளக்கடை ஊராட்சியை சேர்ந்த சிறகுகள் மகளிர் குழு ஆகிய குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இந்த 3 குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் உணவு ஊட்டச்சத்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
    • முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது.

    பவானி:

    இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை ஈரோடு மற்றும் பவானி சித்த மருத்துவ பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவிற்கு சித்த பிரிவு டாக்டர்.கண்ணுசாமி தலைமை வகித்தார். பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன், மனவளக்கலை மன்ற ஆறுமுகம், உலக சமாதான ஆலய ஞானாசியர் ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    சிறு தானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானியத்திலான திண்பண்டங்கள், முளைகட்டிய தானியங்கள், தொற்றா நோய்களுக்கான உணவுகள், உணவு உண்ணும் முறைகள், உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

    முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது. இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு நன்னாரி ஜூஸ், நெல்லிக்கனி ஜூஸ், பருத்திப்பால் உள்பட பல்வேறு வகையான ஜூஸ்கள் வழங்கப்பட்டது.

    ×