search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிறுத்தம்"

    • ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
    • மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில், துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்ட தீர்மானங்களை அலுவலர் சரவணன் வாசித்தார்.

    யூனியனுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுப்புற சுவர் அமைக்கவும், பெரிய பட்டினம் ஊராட்சியில் தக்குவா நகர், ஜலாலியா நகரில் உள்ள அல்ஜலாலியா மழலையர் தொடக்கப்பள்ளி சாலை உள்பட பல்வேறு ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை, படித்துறை தடுப்புச் சுவர், அங்கன்வாடி மராமத்து, உறை கிணறு நடைமேடை அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் சிவலி ங்கம்:- கீழக்கரையில் இருந்து மாயாகுளம் வழியாக ஏர்வாடி செல்லும் அரசு டவுன் பஸ் (எண்.10), பள்ளி, கல்லூரி நேரமான காலை, மாலைகளில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி சென்று திரும்பும்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிறுத்தப்பட்ட வழித்த டத்தை தொடங்க அதிகா ரிகளை வலியுறுத்த வேண்டும்.

    நாகநாதன் (அ.தி.மு.க.) :- ரகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். அம்மா பூங்கா திறக்காமல் உள்ளதால் விளையாட்டு உபகரண பொருட்கள், தளவாடப் பொருட்கள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.

    பைரோஸ்கான் (எஸ்.டி.பி.ஐ.):- சுதந்திர தினம், அரசு சார்ந்த விழாக்களில் பள்ளிகளில் யூனியன் கவுன்சிலர்களை ஆசிரியர்கள் அழைப்ப தில்லை. பெரியபட்டினம் முரைவாய்க்கால் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கமிஷனர் ராஜேந்திரன்:- பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் யூனியன் கவுன்சிலர்களை அழைக்க கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தப்படும்.

    புல்லாணி (தலைவர்):- கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவே ற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஓ. (கி.ஊராட்சி) கணேஷ் பாபு நன்றி கூறினார். துணை பி.டி.ஓ.க்கள், விஜயகுமார், மன்சூர், சத்தியகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிர்பலி வாங்கும் இடமாக மாறியது. இதனால்அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க அங்கு சாலையின் நடுவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். இதனை தொடர்ந்து அங்கு சாலை நடுவே சிமெண்ட் கான்கிரீட் மூலம் பெரிய அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டது. உயிர் பலி தடுக்கஅமைக்கப்பட்டு இருந்தஇந்தவேகத்தடைஉயிர்பலிவாங்கும் வேக தடையாகமாறியது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், கோரி வந்தனர். இந்த வேகத்தடையை உடனடியாக அகற்றபடவில்லை என்றால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறை அதிகாரி அதிரடியாக இந்த வேகத்தடையை முழுமையாக அகற்றினர் இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • 106 டி என்ற அரசு பஸ்சை நம்பி செல்லும்சுற்றுப்புற 6 கிராம மக்களும் கடும் அவதிப்படுகிறோம் என்று மனுவில் கூறியுள்ளனர்.
    • பள்ளி செல்லும் மாணவ -மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.

    உடன்குடி:

    உடன்குடி பரமன்குறிச்சி ரோட்டில் உள்ள செல்வா சிட்டி, ஐடியல்சிட்டி, எம். எம்.நகர். தாயிப்நகர். கிரசன்நகர், எம்.ஜி.ஆர். நகர்ஆகிய 6 ஊர்களில் உள்ள மக்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம், நெல்லை மண்டலம் திசையன்விளை பனிமனையில் இருந்து திசையன்விளை - திருச்செந்தூருக்கு தடம் 106 ஏ மற்றும் தடம் 106 டி என்ற 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தட்டார்மடம், உடன்குடி, பரமன்குறிச்சிரோடு, காயாமொழி வழியாக ஒரே வழித்தடத்தில் இரு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    இதில் ஒன்று திருச்செந்தூரில் புறப்படும் போது, இதே நேரத்தில் மற்றொன்று திசையன்விளையில் புறப்படும். இதில் உடன்குடியை அடுத்த பரமன்குறிச்சிரோடு உடன்குடி தனியார் பள்ளி நிறுத்தம் ஒன்று உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தை சுற்றி செல்வா சிட்டி, எம். எம். நகர், எம்.ஜி.ஆர்.நகர், தாயிப் நகர்.கிரசன் நகர், ஐடியல் சிட்டி என ஆறு கிராமங்கள் உள்ளது. இதில் தடம்106 ஏ என்ற அரசு பஸ் முறைப்படி நின்று பயணிகளைஏற்றி

    இறக்கும். தடம் 106 டி என்ற அரசுபஸ்நின்று செல்லாது, பயணிகளை ஏற்றி இறக்கவும் செய்வதில்லை.

    இதனால் இந்த பஸ்சை நம்பி செல் லும்சுற்றுப்புற 6 கிராம மக்களும் கடும் அவதிப்படுகிறோம். ஒரே வழித்தடத்தில் செல்லும் இரு பஸ்களில் ஒன்று மட்டும் முறையாக நின்று செல்வது ஏன்? மற்றொன்று நிற்க மறுப்பதுஏன்? என பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அவசர தேவைக்கு திருச்செந்தூர். திசையன்விளை, உடன்குடிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர், மேலும் பள்ளி செல்லும் மாணவ -மாணவிகள் பெரும் அவதிப்படுகின்றனர், உடனடியாக 106 டி என்ற அரசு பஸ்சை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

    • பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .
    • புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாண்டியன் கரடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மழைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவதிப்பட்டு வரும் நிலையே உள்ளது. இந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அருகில் உள்ள தேவனூர், புதூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு உள்ள மயிலாடும்பாறை கருப்பராயன் கோவில் பேருந்து நிறுத்தம் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .இங்குள்ள பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் முள் புதர்கள் மற்றும் களைச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தவே மக்கள் தயங்கும் நிலை உள்ளது. அத்துடன் பஸ் நிறுத்தத்தின் ஜன்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தெருவிளக்கு வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பஸ் நிறுத்தத்தை சீரமைக்கவும் புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×