search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதி
    X

    திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது.

    ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதி

    • ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
    • மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில், துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்ட தீர்மானங்களை அலுவலர் சரவணன் வாசித்தார்.

    யூனியனுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுப்புற சுவர் அமைக்கவும், பெரிய பட்டினம் ஊராட்சியில் தக்குவா நகர், ஜலாலியா நகரில் உள்ள அல்ஜலாலியா மழலையர் தொடக்கப்பள்ளி சாலை உள்பட பல்வேறு ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை, படித்துறை தடுப்புச் சுவர், அங்கன்வாடி மராமத்து, உறை கிணறு நடைமேடை அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் சிவலி ங்கம்:- கீழக்கரையில் இருந்து மாயாகுளம் வழியாக ஏர்வாடி செல்லும் அரசு டவுன் பஸ் (எண்.10), பள்ளி, கல்லூரி நேரமான காலை, மாலைகளில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி சென்று திரும்பும்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிறுத்தப்பட்ட வழித்த டத்தை தொடங்க அதிகா ரிகளை வலியுறுத்த வேண்டும்.

    நாகநாதன் (அ.தி.மு.க.) :- ரகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். அம்மா பூங்கா திறக்காமல் உள்ளதால் விளையாட்டு உபகரண பொருட்கள், தளவாடப் பொருட்கள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.

    பைரோஸ்கான் (எஸ்.டி.பி.ஐ.):- சுதந்திர தினம், அரசு சார்ந்த விழாக்களில் பள்ளிகளில் யூனியன் கவுன்சிலர்களை ஆசிரியர்கள் அழைப்ப தில்லை. பெரியபட்டினம் முரைவாய்க்கால் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கமிஷனர் ராஜேந்திரன்:- பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் யூனியன் கவுன்சிலர்களை அழைக்க கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தப்படும்.

    புல்லாணி (தலைவர்):- கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவே ற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஓ. (கி.ஊராட்சி) கணேஷ் பாபு நன்றி கூறினார். துணை பி.டி.ஓ.க்கள், விஜயகுமார், மன்சூர், சத்தியகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×