search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் இயக்கம்"

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் கோரிக்கையால் நடவடிக்கை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வழூர், ஆரியாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். எனவே வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு அரசுப் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வந்தவாசியிலிருந்து வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு புறநகர அரசுப் பஸ் இயக்கப்பட்டது.

    இதையொட்டி ஆரியாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். தி.மு.க. வந்தவாசி மத்திய ஒன்றியச் செயலர் ஆரியாதூர் பெருமாள் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் கொடியசைத்து பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.

    வந்தவாசியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இந்தப் பஸ் வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடு கிராமத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு அதே கிராமங்கள் வழியாக வந்தவாசி வந்தடையும்.

    • இந்த கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி கிடையாது.
    • பல ஆண்டுக்கு பிறகு பஸ் சேவை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமம் செம்மநாரை.

    இந்த கிராமத்தை சுற்றி கனுவட்டி, கோழிக்கரை, மேல் கூப்பு, கீழ் கூப்பு, தாலமொக்கை உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.

    இந்த கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளை கடந்தும் இதுவரை பஸ் வசதி கிடையாது. நடந்தே பல பகுதிகளுக்கும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வந்தனர். எங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு மனு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் பழங்குடியின கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த கிராம பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து செம்மநாரை வரை பஸ் இயக்கி வெள்ளே ாட்டமும் பார்க்கப்பட்டது.

    இதில் வெள்ளோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து நேற்று கோத்தகிரி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செம்மநாரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

    பஸ்சை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட போக்கு வரத்து கழக மேலாளர் நட்ராஜ், கோத்தகிரி போக்குவரத்து பணிமனை மேலாளர் ஞான பிரகாஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் குமார், தலைவர் ரத்தனகுமார், பொருளாளர் ஸ்டீபன் மற்றும் ஆனந்தன், நிரேஷ்கு மார், கோபாலகிருஷ்ணன், யோகரத்தினம், ராமலிங்கம், ரவி, குமார், எர்க்குலர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது சிறுகுடி. இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தற்போது சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி வந்து விட்டாலும் பஸ் வசதி இல்லாமல் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள முத்தனேந்தல் அல்லது இடைக்காட்டூர் வந்து சிறுகுடி மக்கள் பஸ் ஏறி வெளியூர் சென்று வந்தனர்.

    இது குறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசியிடம் உங்கள் முயற்சியால் சிறுகுடிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 75 வருடமாக போக்குவரத்து வசதி இல்லாத சிறுகுடி கிராமத்திற்கு புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் கிராம மக்களோடு பஸ்சில் பயணமும் செய்தார். இதில் தி.மு.க. ஒன்றிய குழு துணை தலைவர் முத்துசாமி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா சிவச்சந்திரன், மலைச்சாமி, நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், மேல்பனையூர் பாலம் அருகே உள்ளது ஆயிரவேலி கிராமம். இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மேல்பனையூர், கீழ்பனையூர், ஆயிரவேலி, நடுவக்குடி, குமரங்காலி ஆகிய கிராமங்கள் வழியாக திருவெற்றியூர் கிராமத்திற்குச் செல்லும் மாணவ-மாணவிகள், வயதா னோர் பயனடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    இந்த பஸ் இயக்கப்படும் சாலையில் மேல்பனையூர் சாலை மட்டும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கீழ்பனையூர், ஆயிரவேலி கிராமங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைவசதி இல்லாத, பழுதடைந்த சாலைகளில் எத்தனையோ பஸ்கள் இயக்கப்படும் நிலையில், சாலை வசதி உள்ள கிராமங்களுக்கு டவுன்பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று இந்தப்பகுதி கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ×