search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருந்து"

    • உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான பருந்துகள் இடம்பெற்றன.
    • வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுள்ளனர்.

    அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான பருந்துகள் இடம்பெற்றன.

    அவற்றில் சிறந்த மற்றும் அரிய வகையான பருந்துகள் இடம்பெற்றிருந்தன. அதில் அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று 1 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 76-க்கு ஏலம் போய் உள்ளது. இந்த வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுள்ளனர்.

    • கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.
    • கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாட்டில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் அதை தவறுதலாக சித்தரித்து தங்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

    இதை கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.

    தனது குஞ்சுகளை பாதுகாக்க தாய்க்கோழி பருந்துடன் சண்டை போடுகிறது. குஞ்சை தூக்கி செல்வதற்காக பருந்து தாய் கோழியுடன் சண்டை போடுகிறது. இதில் வன்முறை செய்வது கோழியா? பருந்தா? பருந்துதானே!

    ஆனால் கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் வீட்டு பால்கனிக்கு காயமடைந்த நிலையில் வந்த பருந்தை பாதுகாத்து உணவளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #SachinTendulkar
    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.

    பின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார். மேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கூறினர். #SachinTendulkar

    ×