search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணாரியம்மன் கோவில்"

    • காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார்.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் வீதி உலா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலம் மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சப்பரம் முன்பு படுத்தும் நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார்கள்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்து வெள்ளியம்பாளையம் மற்றும் கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு சென்று பகுடுதுறை கோவிலில் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொட்டம்பாளையம் கிராமத்துக்கு சப்பரத்தில் சென்ற பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் இரவு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார். வழியெங்கும் இதைக் கண்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் படுத்தபடி பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் என வேண்டி கொண்டனர்.

    தொடர்ந்து வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி ஊருக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் பரிசலில் அக்கறை தத்தப்பள்ளி மற்றும் உத்தண்டியூரில் திருவீதி உலா நடந்தது.

    இதில் சாலைகளில் வழி நெடுக பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    • குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள்ஊர்வலமாக அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு உள்ள சிவலிங்கத்துக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சருகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் புடைசூழ கோவில்பூசாரிகள் ஊர்வலமாக வந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    முன்னதாக இதில் கலந்து கொண்ட ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    • பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×