search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேஷனல் ஹெரால்டு வழக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
    • தடையில்லா சான்றிதழ் தொடர்பான வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்த அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்ததுடன், ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஆனால் அவர் கேட்ட 10 வருடங்களுக்கு அல்லாமல் 3 வருடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

    ×