search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன வழிபாடு"

    • கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை.
    • கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி வருண பகவானுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. பருவமழைகளும் சரிவர பெய்யாததால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து ஏற்கனவே கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி வருண பகவானுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் மண்டியா மாவட்டம் கிக்கேரி அருகே குட்டேஒசஹள்ளி கிராமத்தில் மழை வேண்டி 'சந்திரன் திருமணம்' என்ற நூதன வழிபாட்டை கிராம மக்கள் நடத்தினர்.

    அதன்படி 2 சிறுவர்களை தேர்வு செய்து, அதில் தர்ஷன் என்ற சிறுவனை சூர்யதேவன் வேடத்திலும், லோகேசை சந்திரமதியாகவும் வேடமிட்டு அலங்கரித்தனர். பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மைதா மாவை வாங்கி வந்தனர்.

    அதன்பிறகு அந்த மாவை கொண்டு அப்பம், ரொட்டி தயாரித்து திறந்தவெளியில் சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி நூதன வழிபாடு நடத்தினர். பின்னர் மழை வேண்டி ஆடிப்பாடி அப்பம், ரொட்டியை மக்கள் போட்டி போட்டு எடுத்து சாப்பிட்டனர். இதன்மூலம் வருண பகவான் மழை பொழிய வைப்பார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.
    • அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    சென்னிமலை ,

    சென்னிமலை பார்க் ரோட்டில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. விழாவை யொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.

    இதை தெடர்ந்து பிராட்டியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கார்த்தி, செல்வா, கண்ணன் ஆகி யோர் வேனின் மேல்பகுதி யில் விமான அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    மேலும் பக்தர்கள் 12 அடி நீளமுள்ள அலகை வாயில் குத்தி துர்க்கை அம்மன் கோவில் வரை வந்து அம்மனை வழி பட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதையடுத்து அன்னதானம் வழங்க ப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற்றது.

    • ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் ராஜகணபதி நகரில் ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ வரசித்தி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், 65-ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக சிறப்பு ஹோமங்களும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர், சாமி முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த கடலைக்காய் குவியலுக்கு பூஜைகள் நடத்தி மகாதீபாராதனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் மீது வீசி, நூதன வழிபாடு நடத்தி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு, சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவில் கோவில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முனிசந்திரா, ஜெய்சங்கர், மாமன்ற உறுப்பினர் குபேரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய உணவுகள் சமைத்து, பாத்திரங்களில் தலைச்சுமையாக ஊர்வலமாக கொண்டு சென்று வழிபாடு செய்கின்றனர்.
    • பனை ஓலையில் வாங்கி கிராம மக்களும் சாப்பிட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பொசுக்குடிபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நன்கு மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, அந்த கிராம மக்கள் காளியம்மன்​கோவிலுக்கு பாரம்பரிய உணவுகள் சமைத்து, பாத்திரங்களில் தலைச்சுமையாக ஊர்வலமாக கொண்டு சென்று வழிபாடு செய்கின்றனர். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்த வழிபாட்டை பின்பற்றி வருகிறார்கள்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி ஓர் இடத்தில் அரிசி சாதம், கேப்பை கூழ், மாவு வகை உணவை சமைத்தனர். பின்னர் அவற்றை பாத்திரங்களில் எடுத்து தலையில் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக ஆண்களும், பெண்களுமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு காளியம்மன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு உணவை ஒன்றாக கலந்து, கஞ்சியாக்கி பனை ஓலையில் ஊற்றி வழிபட்டனர். மேலும் பனை ஓலையில் வாங்கி கிராம மக்களும் சாப்பிட்டனர். இந்த பாரம்பரிய வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    ×