search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து அதிகரிப்பு"

    • நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது.
    • லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குறைந்து கொண்டே வந்த அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 1091 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1321 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2786 மி.கனஅடியாக உள்ளது.

    கேரளாவில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1895 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 76.32 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 16, தேக்கடி 12.2, சோத்துப்பாறை 4, கூடலூர், உத்தமபாளையம், சண்முகாநதிஅணை பகுதிகளில் தலா 1 மி.மீ என மழை பதிவாகி உள்ளது.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.

    தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 50.20 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இந்த சூழலில் மழை பெய்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
    • கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தினமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு ஆற்றில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கன அடி ஆகும். கடந்த மாதத்திலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 42.75 கன அடியாக அதிகரித்தது.

    ஏரிக்கு வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.80 கன அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ குடிநீருக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியின் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதா ரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்ட மும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது.அணைக்கு நேற்று வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2,594 கனடியாக அதிகரித்து வருகிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது

    • நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.42 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1,214 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 2,778 கனஅடி நீராக அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.42 அடியாக உயர்ந்து உள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,551 கனஅடியாக அதிகரித்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக, அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 638 கனஅடியாக இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 202 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் கெலவரப்பள்ளி திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,551 கனஅடியாக அதிகரித்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.60 அடியாக உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நெடுங்கல் தடுப்பணை வழியாக சீறி பாய்ந்து செல்கிறது. மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.22 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 697 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.
    • ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    பென்னாகரம்:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறையின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, முதலை பண்ணை காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாகஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 8.58 அடியாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பரவலான மழையால், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 361 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 681 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று(4ம் தேதி) கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டுவிடும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் திறந்துவிடப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போல், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை முழு கொள்ளளவு நிரம்பி உள்ளதால், அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக நின்றிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 110 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 8.58 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.58 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லா ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலை யில் பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த தால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளது.

    இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வருகிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை பாசனத்தி ற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானி சாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.54 அடியாக உள்ளது. பெரு ம்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.29 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.26 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.77 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.77 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,354 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2000 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.90 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.51 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.92 அடியாக உள்ளது.

    • இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு ஒரு மாதமாக நீர்வரத்து 1000 கனஅடியாக தண்ணீர் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    ×