search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு- நீர்மட்டம் 44.80 கன அடியாக உயர்ந்தது
    X

    வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வரும் காட்சி.

    வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு- நீர்மட்டம் 44.80 கன அடியாக உயர்ந்தது

    • வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
    • கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தினமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு ஆற்றில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கன அடி ஆகும். கடந்த மாதத்திலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 42.75 கன அடியாக அதிகரித்தது.

    ஏரிக்கு வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.80 கன அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ குடிநீருக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியின் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×