search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம்"

    • போக்குவரத்து போலீசார் சோதனை
    • பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் அபராதம் விதித்தனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்குள்ளும் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக வும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை தொடர்ந்து போக்கு வரத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பஸ் நிலை யத்திற்குள் நிறுத்தப்பட்டி ருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக காலை முதலே போக்கு வரத்து போலீசார் சோதனை மேற் கொண்டனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் அண்ணா பஸ் நிலையத்திற்கு உள்ளாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட் டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றும் 25 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை ஓரங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் இருசக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பஸ்சில் ஒன்றாக ஏறி மாயமானவரை பிடிக்க தனிப்படை
    • பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை

    நாகர்கோவில்:

    பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை-பணம் ஜேப்படி செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலை யங்களில் சாதாரண உடை களில் போலீசார் சுற்றி வரு கின்றனர்.

    இந்த நிலையில்அண்ணா பஸ் நிலையம் வந்த ஒரு பஸ்சில் இருந்து இறங்கிய மூதாட்டி திடீரென திருடி..திருடி..என கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு பஸ்சில் வந்தவர்களும், பஸ் நிலையத்தில் நின்றவர்களும் திரும்பி பார்த்த போது, ஒரு பெண் அங்கிருந்து ஓடுவது தெரிய வந்தது. அவர் மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் செல்வது தெரிய வந்ததும் பலரும் அந்தப் பெண்ணை விரட்டிச் சென்றனர்.

    பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த பெண், செம்மாங்குடி சாலை வழியாக குறுக்குச் சாலை பகுதியில் சென்றபோது பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. முதலில் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் எனக் கூறிய அவர், அதன் பிறகு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்தார். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி னர். அப்போது அவருக்கு மேலும் சிலருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது.

    இவர்கள் கும்பலாக வந்து பின்னர், ஒன்றிரண்டு பேராக சேர்ந்து ஜேப்படியில் ஈடுபடுவார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே பிடிபட்ட பெண்ணுடன் தொடர்புடைய கும்பல் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் பிடிபட்ட பெண், புத்தேரி பகுதியில் தான் பஸ் ஏறி உள்ளார். அப்போது அவருடன் மேலும் ஒரு பெண்ணும் ஏறி உள்ளார். ஆனால் அவர் திருட்டு சம்பவம் பொதுமக்களுக்கு தெரிந்து கூச்சல்-குழப்பம் ஏற்பட்டதால், அங்கிருந்து நைசாக நழுவி விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர் எங்கே சென்றார்? வேறு பயணிகளிடம் கை வரிசை ஏதும் காட்டி உள்ளாரா? என போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே அந்தப் பெண்ணை பிடிக்கவும், அவருடன் தொடர்பு டைய கும்பலை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்க ப்பட்டு உள்ளன.

    இந்த தனிப்படையினர் பஸ் நிலையத்தில் பிடி பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×