search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுவர்கள் இந்தியன்ஸ்"

    • இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

    மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில், நடுவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளை வழங்குவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முட்டிய நோ-பால் சர்ச்சை தான், சர்வதேச அளவ் டி20 போட்டிகளில் கூட முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    2019-ம் ஆண்டு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் கடைசி 1 பந்துக்கு 7 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில், லசித் மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியும் நோ-பால் வழங்கப்படாமல் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். பவுலிங் லைனை தாண்டி வந்து மலிங்கா பந்தைவீசியது ரீப்ளேவில் எளிதாகவே தெரிந்தது. ஆனால் அதை நடுவர் ஏன் நோ-பாலாக வழங்கவில்லை என்ற சர்ச்சை அப்போது பெரிதாக வெடித்தது.

    அப்போது தொடங்கிய நடுவர்கள் சர்ச்சையானது, நேற்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பெரிதாக வெடித்தது. நேற்றைய போட்டியில் நடுவர்களின் மோசமான முடிவுகளை பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

     

    நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு சாதகமாக நடுவர்கள் அளிக்கப்பட்ட முடிவுகள்:-

    தினேஷ் கார்த்திக்கு எதிராக நோ-பால் வழங்காமல் விட்டது. பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மத்வால் பந்தை பிடிக்கும்போது பவுண்டரி லைனில் டச் செய்ததை பார்க்காமல் 1 ரன் வழங்கியது.

    மும்பை அணிக்கு இருந்த ரிவியூ தீர்ந்தபிறகும் களநடுவர் நாட்-அவுட் கொடுத்த பிறகும் மும்பை அணிக்காக ரிவியூ எடுக்கப்பட்டது. ஒயிடு இல்லாத பந்துக்கு ஆர்சிபி அணிக்கு ஒயிடு வழங்கியது. 

    என நடுவர்கள் வழங்கிய பல முடிவுகள் சர்ச்சையாக மாறி போட்டியின் முடிவில் பெரிய பங்காற்றின. அதைப்பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதை உண்மையாக்கும் வகையில் உள்ளது.

    ×