search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நச்சு"

    • 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரம்
    • குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கு வலம்புரி விளையில் உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகி றார்கள். இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதனால் குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி யில் இரு ந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இருப்பினும் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் நேற்று இரவு வலம்புரிவிளை குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்டார். தீயை விரைந்து அணைக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் அதிகளவு வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நச்சுப்பு கையின் காரணமாக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தூர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள புகை மண்டலம் வட்டவிளை, இருளப்புரம், இளங்கடை பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தால் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    காற்று வேகமாக வீசுவதால் சுசீந்திரம் வரை புகை மண்டலங்களாக காட்சியளிக்கிறது. தீய ணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலமாக குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 40 தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்னும் தீயை கட்டுப்படுத்த 2 நாட்கள் ஆகலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    ×