search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் முறைகேடு"

    • சண்டிகர் மாநில மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
    • தேர்தல் நடத்திய அதிகாரி ராஜினாமா செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கண்டிப்பு.

    சண்டிகர் மாநிலத்தின் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு மூலமாக, பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியானது என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் முறைகேடு நடந்ததை அதிகாரி ஒப்புக்கொண்டது, பாஜனதா எவ்வளவு அதிகார பசியில் உள்ளது என்பதை காட்டுகிறது. சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்பின் படியும் பா.ஜனதா நாட்டு மக்களிடமும், எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் இது போன்றவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்காது" என்றார்.

    முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி "அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் குடும்பத்தையும் அழித்துவிடும், ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் தேசத்துரோகத்திற்கு குறைவானவை அல்ல. மேலும் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்." என்றார்.

    • தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
    • பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.

    இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

    சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

    இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    ×