search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரூர்"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
    • 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நாகர்கோவில்:

    தேரூர் பகுதியை சேர்ந்த வர் ஆறுமுகம் வன ஊழியர். இவரது மனைவி யோ கேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சதாசிவம் சென்னை பகுதியில் தனது பெயரை மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதா சிவத்தை நாகர்கோவில் ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தேரூர் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரூர் இரட்டை கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    • வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவின்படி ரூ. 2.42 கோடி செலவில் தொடங்கியது.
    • இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.

    நாகர்கோவில்:

    தேரூரில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்கள் தேரூரில் உள்ள பெரிய குளத்திலிருந்து பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு தட்டையார் குளம், மாணிக்க புத்தேரி குளம் ஆகிய குளத்திலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தேரூர் குளத்தின் நடுவே வெள்ளமடத்திலிருந்து சுசீந்திரம் செல்லும் சாலை உள்ளது. தேரூர் குளம் மேற்கு பகுதியில் இருந்து தேரூர் கிழக்கு பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குருக்கே இரு இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த குழாய்கள் அடைப்பட்டு தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. தேரூர்குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தண்ணீரை வற்றவைத்து குழாயில் அடைபட்டிருந்த அடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்த குளத்தின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் 2 இடங்களில் பாலம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தேரூர் குளத்தின் இரு இடங்களில் பாலம் அமைக்கும் பணி ரூ. 2 கோடியே 42 லட்சம் செலவில் தொடங்கியது.

    தற்போது இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.

    ×