search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
    • 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நாகர்கோவில்:

    தேரூர் பகுதியை சேர்ந்த வர் ஆறுமுகம் வன ஊழியர். இவரது மனைவி யோ கேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சதாசிவம் சென்னை பகுதியில் தனது பெயரை மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதா சிவத்தை நாகர்கோவில் ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தேரூர் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரூர் இரட்டை கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    ×