search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயகக் கூட்டணி"

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    ×