search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருமுனை பிரசாரம்"

    • குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது
    • பொதுமக்கள் அதிகமாக கலந்துகொள்ள கேட்டு சேவியர் மனோகரன் விளக்க உரையாற்றினார்

    கன்னியாகுமரி : 

    மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள கேட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குளச்சல் நகர அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

    குளச்சல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார். குளச்சல் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுக ராஜா, ஆனகுழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டை விளக்கி பொதுமக்கள் அதிகமாக கலந்துகொள்ள கேட்டு தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு பெருந்தலைவரும், மாவட்ட அவை தலைவருமான சேவியர் மனோகரன் விளக்க உரையாற்றினார். நாகர்கோவில் முன்னாள் நகர செயலாளர் சந்துரு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.எம்.பிள்ளை மற்றும் பேரூர் செயலாளர்கள் ஏரோணி மூஸ், அகஸ்டின், உபால்டு மலுக்கு, லூயிஸ், அமலதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய பட்ஜெட் குறித்த பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் வட்ட பிள்ளையார் கோவில் முன்பு நடந்தது. மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், ரவிசந்திரன், ரங்கசாமி, முத்துசெல்வம், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னதாக நடந்த மண்டல கூட்டத்தில் கட்சி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜாராம் நன்றி கூறினார்.

    இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராம சமுதாய கூடத்தில் பா.ஜ.க. வாடிப்பட்டி தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. மண்டல பார்வையாளர்-மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிராஜன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×