search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா இலங்கை தொடர்"

    டர்பன் டெஸ்டில் இலங்கைக்கு எதிரான நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய டேல் ஸ்டெயின் கபில் தேவ்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார். #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது. 44 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து இருந்தது.



    தென்ஆப்பிரிக்க அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 48 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றி 9-வது இடத்தில் இருந்த கபில்தேவ் (434) சாதனையை முறியடித்தார்.

    92 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றிய அவர் 7-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இங்கிலாந்து வீரர் பிராட்டுடன் இணைந்து அந்த இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் 126 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
    டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 235 ரன்னில் சுருண்டது.

    விக்கெட் கீப்பர் டி காக் அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். பவுமா 47 ரன்னும், டு பிளிசிஸ் 35 ரன்களும், மகாராஜ் 29 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது, கருணாரத்னே 28 ரன்களுடனும், பெர்னாண்டோ 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே மேலும் இரண்டு ரன்கள் அடித்து 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல் பெர்னாண்டோவும் மேலும் 2 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தது. குசால் பேரேரா (51) மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். டி சில்வா 23 ரன்களும், அறிமுக வீரர் அம்பல்டெனியா 24 ரன்களும் அடிக்க இலங்கை 191 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த ரன்தான் இந்த போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருக்க வாய்ப்புள்ளது. 44 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    இலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 235 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvSL
    இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    அடுத்து வந்த அம்லா 3 ரன்னில வெளியேறினார். மார்கிராம் 11 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு பவுமா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    இருந்தாலும் டு பிளிசிஸ் 35 ரன்னிலும், பவுமா 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைநிலை வீரர்களை வைத்துக் கொண்டு டி காக் 80 ரன்கள் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 59.4 ஓவரில் 235 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஆஸ்திரேலியாவில் நான்கு இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே அடித்ததால் இலங்கை கேப்டன் சண்டிமல் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். #SAvSL
    ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 366 ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.

    அந்த அணியின் கேப்டன் சண்டிமல் படுமோசமாக விளையாடினார். முதல் டெஸ்டில் 5 மற்றும் 0 ரன்கள் அடித்த அவர், 2-வது டெஸ்டில் 15 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 6 மட்டுமே.

    இதனால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இலங்கை அணியில் இருந்து சண்டிமல கழற்றி விடப்பட்டார். அத்துடன் உள்ளூர் தொடரில் விளையாட வலியுறுத்தப்பட்டுள்ளார். சண்டிமல் அணியில் இல்லாததால் கருணாரத்னே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 13-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் இருந்து 5 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.#SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இடம்பிடித்துள்ளார்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்ததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான செஞ்சூரியன் மற்றும் கேப் டவுன் டெஸ்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அமிருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆசாத் ஷபிக், அசார் அலி, ஹாரிஸ் சோஹைல், முகமதுத அப்பாஸ், யாசிர் ஷா ஆகியோர் நீக்கப்பட்டு முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஹுசைன் தலாத், உஸ்மான் ஷின்வாரி மற்றும் இமாத் வாசிம் ஆகியோரின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    தென்ஆப்ரிக்காவில் பயமின்றி தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.. #SAvPAK
    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டில் (1998 மற்றும் 2007) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்காது என்பதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பயமின்றி விளையாட வேண்டும் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘பவுன்ஸ், சீமிங் அதிக அளவில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு வீரரும் பயனமின்றி, பெரிய இதயத்தோடு வெற்றிக்காக விளையாட வேண்டும்.



    ஷபிக் மற்றும் அசார் அலியிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை. அவர்கள் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடியவர்கள். ஆகவே, நாங்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டால், சிறந்த பந்து வீச்சை குழுவை கொண்ட நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம்.

    முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    ×