search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி நிலநடுக்கம்"

    • துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    புவனேஸ்வர்:

    துருக்கி, சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.

    நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.

    • கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.
    • சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

    இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னர் 2000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 22,765 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று 6 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை எளிதில் வழங்குவதற்காக சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சர்வதேச உதவிகளை வழங்குவதற்கு சிரியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    • நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது.
    • துருக்கி வரலாற்றில் அந்தநாடு சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இது என கருதப்படுகிறது.

    அங்காரா:

    துருக்கி- சிரியா நாடுகளை கடந்த திங்கட் கிழமை உலுக்கிய நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது.

    சின்னாபின்னமான கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    துருக்கி வரலாற்றில் அந்தநாடு சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இது என கருதப்படுகிறது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்று 5 நாளாகி விட்டது. இன்னும் கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் மீட்பு படையினர் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு சென்று உள்ள மீட்பு குழுவினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில் பல வானுயிர கட்டிடங்கள் இடிந்து கிடக்கிறது. இதனால் மலை போல குவிந்துள்ள இடிபாடுகளை அகற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேரும் இது வரை இறந்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,051 ஆக உயர்ந்துள்ளது.

    கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். சம்பவம் நடந்து 5 நாட்களாகி விட்டதாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருவதாலும் அவர்கள் இன்னும் உயிருடன் இருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் மீட்பு படையினர் நம்பிக்கையுடன் மீட்பு பணியை இடைவிடாமல் செய்து வருகின்றனர்.துருக்கியில் 82 மணி நேரத்துக்கு பிறகு 2 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளான்.

    இந்த இயற்கை பேரழிவில் வீடுகள் மற்றும் உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக அங்கும் இங்கும் பித்து பிடித்தது போல சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தரை மட்டமான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் உறவினர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய அவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்ற ஏக்கத்தில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மீட்கப்பட்ட பொதுமக்கள் கடும் குளிராலும் பசி பட்டினியாலும் இருந்து வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்ட்டு உள்ளன. இதைத்தவிர மைதானங்கள், மசூதிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் வெட்ட வெளிகளிலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கார் போன்ற வாகனங்களிலும் அவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

    இரவு நேரம் கடுமையான பனிப்பொழிவு வாட்டி வதைப்பதால் அவர்கள் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அடிப்படை வசதியின்றியும் தவிக்கின்றனர். கைக்குழந்தைகள் பாலுக்காக அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அவர்களுக்கு சரிவர உணவு, மற்றும் குடிநீர் எதுவும் கிடைக்கவில்லை. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் விமான நிலையங்கள், ரெயில் தண்ட வாளங்கள் சேதம் அடைந்து உள்ளதால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. துருக்கியில் 7 நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் கிடக்கிறது.

    இங்கு பொது மருத்துவ மனைகள் உள்பட 3 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதேநிலைமை தான் சிரியா நாட்டிலும் நிலவுகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களின் வாழ்க்கையை தற்போது நிலநடுக்கம் மேலும் புரட்டி போட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிவாரண பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்குமாறு சிரியா கோரிக்கை விடுத்து உள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2 நாடுகளுக்கும் தேவையான உதவிகளை இந்தியா செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதையடுத்து மத்திய அரசு உடனடியாக மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுவினரை போர் விமானம் மூலம் அந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. ஆபரஷேன் தோஸ்த் என்று அழைக்கப்படும் 250 பேர் கொண்ட இந்த படையினர் தற்போது நிலநடுக்க பகுதியில் தீவிரமாக களம் இறக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுடன், நவீன கருவிகள் மற்றும் 135 டன் எடை கொண்ட உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் சென்று உள்ளன.

    இந்திய படையினர் துருக்கியில் துரிதமாக செயல்பட்டு அங்கு தற்காலிகமாக 30 ஆஸ்பத்திரிகளை அமைத்து உள்ளனர். படுக்கை வசதிகள் கொண்ட இந்த ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் தியேட்டர்கள், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இந்திய மருத்துவ குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த மீட்பு படையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 2 பெண் அதிகாரிகளும் இடம் பெற்று உள்ளனர். இவர்களின் அயராத உழைப்பு துருக்கி மக்களிடயே சோகத்தை மறந்து பாராட்டுகளை பெற்று உள்ளது. துருக்கி பெண்கள் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் இதயத் துடிப்பைக் கண்டறியும் ரேடார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    • இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் டாக்டர்களை அந்த பகுதி மக்கள் கட்டி தழுவி நன்றி தெரிவித்தனர்.

    திருப்பதி:

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை ராணுவ டாக்டர்கள் செய்து வருகின்றனர்.

    தற்காலிக மருத்துவமனையில் எந்திரங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காசியான்டெப் பகுதியில் 6 வயது குழந்தை மீட்கப்பட்டது. கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் இதயத் துடிப்பைக் கண்டறியும் ரேடார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் டாக்டர்களை அந்த பகுதி மக்கள் கட்டி தழுவி நன்றி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் கவுட் என்ற நபர், துருக்கியில் பணியாற்றி வந்தார். அவர் நிலநடுக்கம் வந்த பிறகு காணாமல் போய்விட்டார். அவரது குடும்பத்தினரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
    • இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்தியா சார்பில் 'ஆபரேஷன் தோஸ்த்' திட்டத்தின் கீழ், பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக மீட்புப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் ஆறு விமானங்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து, இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படை குறித்து பெருமைக் கொள்கிறோம். துருக்கியில் நடந்த மீட்புப் பணிகளில், காஜியான்டெப் நகரில் ஐஎன்டி-11 என்ற குழு பெரன் என்ற 6 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய மீட்பு படையினரை உலகின் முன்னணி பேரிடர் மீட்புப் படையாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் மீட்புக்குழுவை அனுப்பியுள்ளன.
    • இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப்படை ஈடுபட்டு வருகிறது.

    அங்காரா:

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலநடுக்கத்ததால் வீடுகளை இழந்தவர்களில் பலர் அரசு அமைத்துள்ள கூடாரங்கள், மைதானங்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கின்றனர்.

    இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்துள்ளன.

    அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்புப் படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் வாகனங்கள் களத்தில் உள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • பேரழிவிற்குள்ளான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுமாறு உயிர் பிழைத்த ஒருவர் கோரிக்கை வைத்தார்.

    அங்காரா:

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 19300 ஆக உயர்ந்தது.

    இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை உயிருடன் மீட்பதற்காக மீட்புப் படையினர் தங்கள் முயற்சியை தொடர்ந்தனர்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஒருபக்கம் ஆறுதலை அளித்தாலும், இந்த பேரழிவில் இருந்து உயிர்தப்பிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் துயரங்களை எதிர்கொள்வது வேதனை அளிப்பதாக உள்ளது. வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கும் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    துருக்கியின் அன்டாக்யா நகரில், குழந்தைகள் குளிருக்கு அணியக்கூடிய கோட்டுகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு வாகனத்தின் முன் திரண்ட மக்கள் உதவி கேட்டு கதறினர். பேரழிவிற்குள்ளான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுமாறு உயிர் பிழைத்த ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    நிலநடுக்கத்ததால் வீடுகளை இழந்தவர்களில் பலர் அரசு அமைத்துள்ள கூடாரங்கள், மைதானங்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கின்றனர். கடும் குளிர் நிலவுவதால், ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். அதேசமயம், கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்கள் ஒருவேளை உயிரோடு இருந்தாலும், தற்போது நிலவும் கடுமையான குளிரால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. 

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
    • அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நிலநடுக்க அறிவியலாளர்களில் ஒருவரான இத்தாலிய நாட்டு விஞ்ஞானியான பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறும்போது, டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி அமைந்து உள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என கூறியுள்ளார்.

    இது அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதில், குறிப்பிடும்படியாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்து உள்ளன. இதில் ஏற்பட்ட அதிர்வில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவிலான நிலநடுக்கம் உருவாகி உள்ளது.

    அனடோலியன், அராபிக்கா, யுரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய 4 தட்டுகள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் டாக்லியோனி கூறியுள்ளார். 

    • மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தெளிவாகத் தெரிகிறது.
    • நிலநடுக்க சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இவர்களை இரவும், பகலாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடும் குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தெளிவாகத் தெரிகிறது.

    அந்த புகைப்படங்களில், உயரமான கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான அவசரகால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், துருக்கியில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலநடுக்க சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    • நிலநடுக்கத்தால், நேற்றைய பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.
    • பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    துருக்கி- சிரியா எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

    மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.

    இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • துருக்கியில் 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • நிவாரண பொருட்களை சிரியா அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரி எஸ்.கே.யாதவ் ஒப்படைத்தார்.

    அங்காரா :

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.

    பூகம்பத்தால், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. நவீன எந்திரங்கள் உதவியுடன் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இடிபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. துருக்கியில் 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    ஒரு வார கால தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை நேற்று 8 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. இதை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்தார். நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டபோது இத்தகவலை கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    முதல் நாளில் மீட்புப்பணியில் தொய்வு இருந்தபோதிலும், தற்போது நிலைமை சரியாகிவிட்டது. துருக்கியில், 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரையும் தெருவில் நிற்கவிட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிரியாவில் 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதனால் இரு நாடுகளிலும் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    துருக்கியில் 2 டஜனுக்கு மேற்பட்ட நாடுகள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், பலர் உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 3-வது நாளான நேற்று, கரமன்மராஸ் நகரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கிடையே ஆரிப்கான் என்ற 3 வயது ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அக்குழந்தையை பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    சில மணி நேரங்கள் கழித்து, அதியமன் நகரில், பேதுல் எடிஸ் என்ற 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள். அவளது தாத்தா, கண்ணீர்மல்க முத்தமிட்டு, ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்.

    துருக்கியில் கூடாரம், ஸ்டவ் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 2 குழுக்கள் ஏற்கனவே துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு 3-வது குழு அனுப்பிவைக்கப்பட்டது.

    7 வாகனங்கள் மற்றும் 4 மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 5 பெண்களும் அடங்குவர்.

    பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்பட 6 டன் நிவாரண பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அந்த விமானம், நேற்று காலை சிரியா போய்ச் சேர்ந்தது.

    நிவாரண பொருட்களை சிரியா அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரி எஸ்.கே.யாதவ் ஒப்படைத்தார்.

    இதுபோல், 30 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி அமைப்பதற்கான ராணுவ தள ஆஸ்பத்திரி தளவாடங்களை சுமந்து கொண்டு 2 விமானப்படை விமானங்கள் நேற்று துருக்கி நாட்டுக்கு போய்ச் சேர்ந்தன. அதில், 54 மருத்துவ பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.இதற்கிடையே, துருக்கி மற்றும் சிரியாவுக்கு கப்பல்கள் மூலம் 10 ஆயிரம் நடமாடும் வீடுகள் படிப்படியாக அனுப்பிவைக்கப்படும் என்று கத்தார் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, ஹைதி நாட்டில் நடந்த 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியானதுதான் மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

    • மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    • சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

    துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமி, 17 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர். இதில், மரியம் என்ற அந்த 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார். அவருக்கு அருகே சிறுமியின் சகோதரன் படுத்து கிடக்கிறான். இருவரும் நகர முடியாமல் கிடக்கின்றனர். எனினும், சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை கொண்டு சிறுமி போர்த்தியபடி காணப்படுகிறார். சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சையில் சேர்த்து உள்ளனர்.

    இதேபோல் சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் நொறுங்கிய மருத்துவமனைக்குள் தாய் இறந்த நிலையில், தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக மீட்புக்குழுவினர் பகிர்ந்துள்ள வீடியோ, பார்த்தவர்களை பதற வைத்துள்ளது.

    ×