search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி நிலநடுக்கம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
    • நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது.

    துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.

    மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப்படுகிறது. அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

    நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.

    இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள்.

    இதே போல் பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கட்டிட இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று மோப்ப நாய் மற்றும் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப் டுகிறது. அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றுகிறார்கள்.

    கஹ்ரமன்மரஸ் மாகாணத்தில் 183 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அதே போல் ஹடாய் மகாணாத்தில் 182 மணி நேரத்துக்கு பிறகு 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • துருக்கி மாராஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மலை போல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிகை 34 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    துருக்கியில் 30 ஆயிரம் பேரும் சிரியாவில் 4 ஆயிரம் பேரையும் நிலநடுக்கம் காவு வாங்கி உள்ளது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அவ்வப் போது குழந்தைகள் உள்பட சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    துருக்கியில் 147 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி பத்தரமாக மீட்கப்பட்டு உள்ளார். இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாலும் அங்கு கடுமையான குளிர் நிலவி வருவதாலும் கட்டிட இடி பாடுகளில் உள்ளவர்கள் உயிர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்றும் பலரது உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டி உள்ளது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்தும், உறவினர்களை பறிகொடுத்தும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்ணீர் மல்க சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க பிணமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் கொத்து கொத்தாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக இருக்கிறது.

    துருக்கி மாராஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. உடல்கள் வாகனங்களின் மூலம் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் உறவினர்கள் கடும் சிரமத்தை மேற்கொண்டனர். அவர்கள் யார்? என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. இருந்த போதிலும் உடல்கள் தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காட்சிகளால் துருக்கியில் திரும்பும் திசையெல்லாம் அழுகுரல்கள் கேட்பதோடு சோகமயமாகவும் காட்சி அளிக்கிறது.

    • ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக்குழு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், மருந்துகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மேலும் ஏராளமான நிவாரண பொருட்களுடன் 7-வது இந்திய விமானப்படை விமானம் நேற்று இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் சோலார் விளக்குகள், அவசர கால மருந்துகள் உள்பட 35 டன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 23 டன் பொருட்கள் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கும், 12 டன் பொருட்கள் துருக்கிக்கும் வழங்கப்பட்டன.

    இந்தியா அனுப்பிய பொருட்களை டமாஸ்கசில் அந்நாட்டு உள்ளாட்சி மற்றும் சுற்றுச்சூழல் துணை மந்திரி மவுதாஸ் டவாஜி பெற்றுக்கொண்டார் என மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

    • துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    • இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அங்காரா:

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

    இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

    இந்நிலையில், துருக்கியின் கராமன்மராஸ் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    • நிலநடுக்கத்தால் இதுவரை 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

    பெர்லின்:

    துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது.

    முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவிட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நிலநடுக்கம் பாதித்த துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி பீசர் கூறுகையில், பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மனிக்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என தெரிவித்துள்ளார்.

    • துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • நிலநடுக்கத்தில் சிக்கி மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.

    நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

    நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது. இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.

    • துருக்கியில் 6-ம்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்தியா துருக்கி, சிரியா நாடுகளுக்கு ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் உதவி வருகிறது.

    புதுடெல்லி :

    கடந்த திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் துருக்கி சந்தித்த பயங்கர நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பல மாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகின.

    அதன் அண்டை நாடான சிரியாவிலும் இந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்விரு நாடுகளிலும் இடிபாடுகளை அகற்றும் பணி, மீட்புப்பணி கொட்டும் பனிக்கு மத்தியில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    துருக்கியையும், சிரியாவையும் கதி கலங்க வைத்த இந்த நிலநடுக்கம், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.

    துருக்கியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், சிரியாவில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேரும் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

    இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் துருக்கிக்கும், சிரியாவுக்கும் நெருக்கடியான இந்த தருணத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் கைகொடுத்து வருகின்றன.

    குறிப்பாக இந்தியா துருக்கி, சிரியா நாடுகளுக்கு 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் உதவி வருகிறது. இதற்காக இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவத்தின் டாக்டர்கள் குழு துருக்கி சென்றுள்ளன. அவை தொடர்ந்து துருக்கி மக்களுக்கு உதவி வருகின்றன.

    இந்த நிலையில், காசியன்டெப் நகரில் நேற்று பகல் 3.45 மணிக்கு இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் 8 வயது சிறுமியை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டுள்ளது. இதை அந்தப் படை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

    அந்தப்பதிவில், "கடின உழைப்பும், ஊக்கமும் கை கொடுத்து இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், துருக்கி ராணுவத்துடன் சேர்ந்து மேலும் ஒரு சிறுமியை (8 வயது) மீட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    அந்தச் சிறுமிக்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் அதே காசியன்டெப் நகரில் பேரென் என்ற பகுதியில் இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி ஒருவரை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டது நினைவுகூரத்தக்கது.

    இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.

    துருக்கியில் உள்ள இஸ்பென்டெரன் நகரில் இந்திய ராணுவம் 30 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக ஆஸ்பத்திரியை அமைத்து, இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

    காசியன்டெப் மாகாணத்தின் நுர்டாக் என்ற இடத்தில் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

    இது அந்த குடும்பத்தினருக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. மீட்பு படையினரும் கடவுள் பெரியவர் என கூறி கொண்டாடினர்.

    நிலநடுக்கத்தின் கோரத்தாண்டவத்தால் நிலை குலைந்துபோயுள்ள துருக்கி, சிரியாவில் 4 லட்சம் பேருக்கு உலக சுகாதார நிறுவனம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. அவர்களுக்காக 72 டன் அவசர கால அறுவை சிகிச்சை மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவற்றை இரு நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அனுப்பி உள்ளது.

    இவ்விரு நாடுகளிலும் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கடும் குளிரை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு குறைவான அளவில்தான் தங்குமிடம், உணவு, தண்ணீர், மருத்துவ பராமரிப்பு கிடைப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம்" என தெரிவித்தார்.

    • துருக்கி, சிரியாவில் இதுவரை 28 ஆயிரம் பேர் பலியாகினர்.
    • கடும் குளிர், சேதமடைந்த சாலைகளால் மீட்புப் பணி சவாலாக உள்ளது.

    அங்காரா:

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் துருக்கியில் 24,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது.
    • விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

    பெங்களூரு பீனியாவில் உள்ள நைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக விஜய்குமார் (வயது 36) என்பவர் பணியாற்றி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் இவரது பூர்வீகம் ஆகும். இவர், பணியாற்றும் நிறுவனம் துருக்கி நாட்டிலும் புதிதாக நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகிறது.

    அந்த கட்டிட பணிகளை கண்காணிப்பதற்காக என்ஜினீயர் விஜய்குமார், பெங்களூருவில் இருந்து துருக்கிக்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில், கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜய்குமார் மலாட்யா என்ற தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் மாயமான விஜயகுமார் ஹோட்டலின் இடிபாடுகளில் சடலமாக மீட்கப்பட்டதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் அவரது குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

    நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னர் 2000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 22,765 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை எளிதில் வழங்குவதற்காக சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சர்வதேச உதவிகளை வழங்குவதற்கு சிரியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    • துருக்கியில் கடந்த 6-ந்தேதி அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.

    டமாஸ்கஸ் :

    துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியில் பேரழிவை ஏற்படுத்தியதுடன், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய செய்தது. சிரியாவில் இந்த நிலநடுக்கத்துக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. இந்த சூழலில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாண்டரிஸ் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின் உயிரை விட்டார்.

    அந்த பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. இதனிடையே கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் பிறந்த குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அந்த குழந்தை உலகம் முழுவதும் கவனம் பெற்றது.

    அந்த குழந்தை பராமரித்து வரும் டாக்டர் காலித் அத்தியா குழந்தைக்கு அயா என பெயர் சூட்டியுள்ளார். அயா என்றால் அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள். இந்த நிலையில் குழந்தை அயாவை தத்தெடுக்க உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களின் விருப்பத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.

    குவைத் நாட்டை சேர்ந்த டி.வி. தொகுப்பாளர் ஒருவர், "சட்ட நடைமுறைகள் என்னை அனுமதித்தால், இந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் தத்தெடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் "நான் அவளைத் தத்தெடுத்து அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

    ஆனால் 5 மாத பெண் குழந்தைக்கு தந்தையான டாக்டர் காலித் அத்தியா, "இப்போது அவளைத் தத்தெடுக்க நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன். அவளது உறவினர் திரும்பும் வரை, நான் அவளை என் சொந்தப் பெண்ணாகப் பார்த்துக்கொள்வேன்" என்கிறார். டாக்டர் காலித் அத்தியாவின் மனைவி தனது மகளோடு சேர்த்து அயாவுக்கும் தாய்பால் கொடுத்து பரிவுடன் கவனித்து வருகிறார்.

    ×