search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்"

    • இந்த விழா 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

    திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலை, இரவு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    விழா நிறைவு நாளான 28-ந்தேதி பஞ்சம தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

    இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக இணை அலுவலர் வீர பிரம்மம் கூறுகையில்:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி பிரமோற்சவ விழா நடைபெற்றது.

    தற்போது தொற்று குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் விழாவில் அனுமதிக்க உள்ளனர். மாட வீதிகளில் சாமி வீதி உலாவை காண பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, கூடுதல் பஸ் போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    • தங்க பாதம் 85 கிராம் எடை கொண்டது.
    • இந்த பாதங்களின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

    திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா என்ற பக்தர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கினார்.

    கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள் வழங்கப்பட்டன. 85 கிராம் எடை கொண்ட இந்த பாதங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் என பக்தர் கூறினார்.

    • புனிதநீரில் 3 முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.
    • சுந்தரராஜசாமி, பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. ேநற்று மகா பூர்ணாஹுதியோடு பவித்ரோற்சவம் நிறைவடைந்தது. அதையொட்டி காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மகா பவித்ர பூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப ரோக்ஷணம், நிவேதனம் ஆகியவை சாஸ்திர ரீதியாக நடத்தப்பட்டது.

    அதைத்தொர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருடன் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு சக்கரத்தாழ்வாரை பத்மபுஷ்கரணிக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பாரம்பரிய முறைப்படி புனிதநீரில் 3 முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.

    நிறைவாக மாலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர்களான சுந்தரராஜசாமி, பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    • திருச்சானூர் கோவிலில் நாளை முதல் 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது.
    • புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 7 மணி முதல் 9.30 மணிக்குள் தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக் கட்டா போன்ற சுகந்தாவாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், பிரபாகர் ரெட்டி, கோவில் அர்ச்சகர் பாபுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐதராபாத்தை சேர்ந்த ஸ்வர்ணகுமார் ரெட்டி என்ற பக்தர் கோவிலுக்கு 17 திரைச்சீலைகளை வழங்கினார்.

    • பவித்ரோற்சவம் வரும் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • 7-ந்தேதி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வரும் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி மாலை விஸ்வக்சேனர் ஆராதனம், புண்யாஹவச்சனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பவித்ரோற்சவத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அங்குரார்ப்பணத்தையொட்டி 7-ந்தேதி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    பவித்ரோற்சவத்தின் முதல் நாளான 8-ந்தேதி திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, 9-ந்தேதி அபிஷேக சேவை, பிரேக் தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, 10-ந்தேதி சாம வேத புஷ்பாஞ்சலி, பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரம் தரும் அம்மன் என்பதால் வரலட்சுமி என அழைக்கப்படுகிறார்.
    • விரத பூஜையில் பங்கேற்க 550 தரிசன டிக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதிதாயார் கோவிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நேற்று வரலட்சுமி விரதம் நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவர் பத்மாவதிதாயாரை சுப்ரபாதத்தில் துயில் எழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை மற்றும் மூலவர், உற்சவர் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது. இந்த உற்சவங்களில் பத்மாவதிதாயார் தங்கயிழை சேலையில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதன்பிறகு பத்மாவதிதாயார் உற்சவர் தாயார் ஆஸ்தான மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்மபீடத்தில் வைக்கப்பட்டார். அங்கு விஷ்வக்சேனர் வழிபாடு, புண்யாஹவச்சனம், கலச ஸ்தாபனம், அம்மன் வழிபாடு, லட்சுமி சஹஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்திர சத நாமாவளி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    அப்போது பாரம்பரிய மலர்களான ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி, துளசி, பன்னீர் இலை மருவம், தாமரை போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தாயாருக்கு 12 வகையான நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மகா மங்கள ஆரத்தியோடு வரலட்சுமி விரதம் நிறைவடைந்தது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது வீரபிரம்மன் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்த வரலட்சுமி விரத பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். விரத பூஜையில் பங்கேற்க 550 தரிசன டிக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, உற்சவள் முறையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    வரம் தரும் அம்மன் என்பதால் வரலட்சுமி என அழைக்கப்படுகிறார். வரலட்சுமி விரத பூஜையை பக்தர்கள் கடைப்பிடித்தால் அஷ்டலட்சுமியை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் உற்சவர் பத்மாவதிதாயார் தங்கத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை மூலம் ஆஸ்தான மண்டபத்தில் விரத பூஜை மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மலர் அலங்காரம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. 15 பணியாளர்கள் 2 டன் பாரம்பரிய மலர்கள் மற்றும் 25 ஆயிரம் கொய்மலர்கள் மூலமாக 3 நாட்களாக கடுமையாக உழைத்து கோவில், ஆஸ்தான மண்டபம், விரத மண்டபங்களை அலங்காரம் செய்தனர்.

    அதில் வெற்றிலை மற்றும் ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி, அன்னாசி போன்ற பழங்களும், பல்வேறு பாரம்பரிய மலர்களும் விரத மண்டபத்தை அலங்கரித்தன. மண்டபத்தின் மேல் பகுதியில் கஜலட்சுமி தேவியும், கீழ் பகுதியில் இருபுறமும் ஐராவதங்களும் (யானைகள்) சிறப்பாக இருந்தது.

    ஆஸ்தான மண்டபம் அஷ்டலட்சுமி மூர்த்திகளாலும், ரோஜா, தாமரை போன்ற பல வண்ணமலர்களாலும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் காணிக்கையால் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் அனைவரும் வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்று தாயாரை வழிபடுவதற்காக ஆஸ்தான மண்டபம், புஷ்கரணி, கங்குந்திரா மண்டபம் ஆகிய இடங்களில் அகண்ட ஒளித்திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒளி பரப்பப்பட்டது. அதை, பக்தர்கள் கண்டு களித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வரலட்சுமி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

    திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி கோவில் வளாகம் விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களைக் கொண்டு கோவில் வளாகம் மற்றும் ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி பத்மாவதி தாயார் ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் மலர் அபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • பக்தர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ பங்கேற்று தரிசனம் செய்யலாம்.
    • தரிசன டிக்கெட்டுகள் நேரிலும், ஆன்லைனிலும் வழங்கப்படும்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரலட்சுமி விரத உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்க உள்ள வரலட்சுமி விரத உற்சவ ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனைத்து வசதி ஏற்பாடுகளும் செய்து தரப்படும். பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் தனித் தரிசன வரிசை அமைக்கப்படும். பக்தர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ பங்கேற்று தரிசனம் செய்யலாம். அதற்கான தரிசன டிக்கெட்டுகள் நேரிலும், ஆன்லைனிலும் வழங்கப்படும்.

    வரலட்சுமி விரத உற்சவத்தையொட்டி கோவிலும், ஆஸ்தான மண்டபமும் பல்வேறு வகையான மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்படும். அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நடக்கும் வரலட்சுமி விரத உற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏழுமலையான் கோவில் பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    ×