search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குறுங்குடி"

    • இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை.
    • ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

    திருக்குறுங்குடி அற்புதமான தலம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப் பாடி பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்). ஸ்ரீபாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு.

    அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடம் இருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சி லைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு `மகேந்திரகிரி நாதர்' என்றும் `பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர். இத்தனை சிறப்பு பெற்ற திருக்குறுங்குடியில் பங்குனி பிரம்மோற்சவம் மிகப்பெரிய உற்சவம். அதில் இன்றைய தினம் திருத்தேர்.

    • உற்சவ பெருமாள் பருத்தி ஆடை வஸ்திரம் உடுத்தி அருள் பாலித்து வந்தார்.
    • பெருமாளுக்கு பழ வகைகள் சமர்பணம் செய்து பூஜை நடை பெற்றது.

    ஏர்வாடி:

    பெருமாளின் 108 திவ்விய தேசங்களில் 57-வது திவ்விய தேசமாக குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் இருந்து வருகிறது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் சுந்தரேச பரிபூர்ண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோ விலில் கோடை உத்சவ விழா நடை பெற்று வந்தது. தாயாரு டன் உற்சவ பெருமாள் பட்டு பீதாம்பரம் இல்லாமல் மிக எளிய பருத்தி ஆடை வஸ்திரம் உடுத்தி தினமும் அருள் பாலித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெருமாள் தாயா ருடன் குலசேகர மண்ட பத்தில் எழுந்தருளினார். திருக்கு றுங்குடி ஜீயர் சுவாமிகள் பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்தார். அதன் பின்பு பல்வேறு பழ வகைகள், நெய்வேத்தி யங்கள் பெருமாளுக்கு சமர்பணம் செய்து அர்ச்சகரால் அலங்கார பூஜை நடை பெற்றது. அதன் பின்னர் தோளுக்கு இனியன் பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோடை கால வசந்த உத்சவம் சிற ப்பான முறையில் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவின் கைங்கே ரியம் மற்றும் மங்கள செல விளங்கள் ஊர் பொது மக்கள் சார்பாக நடை பெற்றது.

    ×