search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஐடி"

    • கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.
    • நேற்று ஒரேநாளில் பா.ஜனதா கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் பா.ஜனதா மற்றும் அதிமுக தனித்தனியாக தமிழகத்தில் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டன.

    இரண்டு கட்சிகளும் பாமக-வுக்கு வலைவிரித்தன. இந்த மக்களவை தேர்தலை தவிரித்து 2026 சட்டமன்ற தேர்தலையும் மனதில வைத்து பாமக பல்வேறு கணக்குகளை போட்டது.

    பல்வேறு காரணங்களை மனதில் வைத்து அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் மாநிலங்களவை இடம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாமக அதில் உறுதியாக இருந்தது. இதனால் இன்று கூட்டணி முடிவாகிவிடும். நாளை முடிவாகிவிடும் என நாட்கள் இழுத்துக் கொண்டே சென்றன.

    இந்த நிலையில்தான் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பாமக நேற்று அறிவித்தது. நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரவில் பா.ஜனதா உடன்தான் கூட்டணி என பாமக தனது முடிவை அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை மத்திய மந்திரி எல். முருகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் வழங்கப்பட்டது.

    பாமக-வை அதிமுக முழுமையாக நம்பியிருந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளது. இது அதிமுக-வுக்கு பின்னடைவுதான்.

    இச்சம்பவத்தை வைத்து திமுக ஐ.டி. பிரிவு எக்ஸ் பக்த்தில் அதிமுக-வை கிண்டல் செய்யும் வகையில் ஊட்டிக்கு தனியாதான் போகனும் போல... என எடப்பாடி பழனிசாமி வீட்டின் படத்தை வெளியிட்டு பதிவிட்டிருந்தது.

    சத்யராஜ் நடித்துள்ள அமைதிப்படை படத்தில் சத்தியராஜ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். வாக்கு எண்ணிக்கையின் போது, அவரது வாக்கு வித்தியாசத்தில் அதிகரிக்க அதிரிக்க மணிவண்ணன் சின்னவீடு அப்படியோ சத்தயராஜ் பக்கம் சாய்வார். அப்போது மணிவண்ணன் இதுபோன்ற ஒரு வசனத்தை பேசுவார். அதை வைத்து நக்கலாக திமுக இவ்வாறு பதிவிட்டுள்ளது.

    இதற்கு அதிமுக பதிலடி கொடுக்கும் வகையில் "உனக்கென்னப்பா... நீ ஜாபர் சாதிக்கை கூட கட்சியில சேர்த்துட்டு Private Jet ல போவ.

    நாங்க அப்படியா? தமிழ்நாட்டு நலன் பத்தி சிந்திக்கிற கட்சிகளுடனும் மக்களுடனும் கூட்டணி வெச்சிருக்கோம்.

    ஊட்டி என்ன- கும்மிடிப்பூண்டில இருந்து குமரி வரைக்கும் எல்லா ஊருக்கும் போவோம்- ஸ்டைலா கெத்தா! ?️" என பதிலடி கொடுத்துள்ளது.

    ×