search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல்"

    • புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேனி:

    புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நாளை அதிகாலை ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 82 இடங்களில் வாகன சோதனைகள், 77 இடங்களில் அதிரடிப்படை ேபாலீசார் ஆய்வு, 28 நான்கு சக்கர வாகனங்கள், 63 இரு சக்கர வாகங்களில் ரோந்து நடைபெற உள்ளன.

    மேலும் இரவு ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடகூடாது. மதுஅருந்தியும் அதிகவேகமாகவும் வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 2001ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
    • எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் உள்ளேன்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன். இவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2001ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அவர் தனக்கு அ.தி.மு.க.வில் அவைத்தலைவர் பதவி வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தலைமை பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் சரி எனக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன்.

    எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் உள்ளேன். தேவேந்திரகுல வேளாளர் சமூதாயத்தை சேர்ந்த எனக்கு இந்த பதவியை வழங்கினால் இந்தசமூதாய மக்களை பெருமைப்படுத்தும் வகையில் அமையும். எனவே இந்த பதவியை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளேன் என்றார்.

    திண்டுக்கல் அருகே கேரள வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் கிரிஷ் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கமாலுதீன் என்பவர் மூலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள வி.குரும்பபட்டிக்கு மாங்காய் பறிக்கும் பணிக்காக தொழிலாளர்களுடன் வந்திருந்தார்.

    காண்டிராக்ட் வேலை முடிந்து விட்டதால் அவர்கள் அனைவரும் சென்று விட்டனர். கிரிஷ் மட்டும் நேற்று மீண்டும் வி.குரும்பபட்டிக்கு வந்தார். பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் எதற்காக வந்தாய்? என தோட்டத்தின் உரிமையாளர் பிச்சை கூறியுள்ளார்.

    இன்று காலை வத்தல தொப்பம்பட்டியில் உள்ள மாந்தோப்பில் கழுத்தில் கயிறு மாட்டிய நிலையில் கிரிஷ் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் வசந்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவரது புகாரின் பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கிரிஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர்.

    ×