search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனியில் கட்டுப்பாடுகள் தீவிரம்"

    • புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேனி:

    புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நாளை அதிகாலை ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 82 இடங்களில் வாகன சோதனைகள், 77 இடங்களில் அதிரடிப்படை ேபாலீசார் ஆய்வு, 28 நான்கு சக்கர வாகனங்கள், 63 இரு சக்கர வாகங்களில் ரோந்து நடைபெற உள்ளன.

    மேலும் இரவு ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடகூடாது. மதுஅருந்தியும் அதிகவேகமாகவும் வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×